கொட்டோ கொட்டுனு கொட்டும் மழை… முழு கொள்ளளவை நெருங்கும் ஆழியாறு : ஆர்ப்பரிக்கும் அருவி..சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2022, 5:09 pm
aaliyar Dam - Updatenews360
Quick Share

கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை தொடர் மழையால் 100 அடியை எட்டியது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு உட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 15 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆழியார் அணைக்கு வரும் நீர் வழி பாதைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

மேலும் குரங்கு அருவியில் ஆர்ப்பரித்து நீர் கொட்டுவதால் ஆழியார் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த உயரமான 120 அடியில் இன்று காலை 98.80 அடி வரை நீர் இருப்பு இருந்தது. வினாடிக்கு 2900 கன அடி நீர் வரத்தாக வந்து கொண்டிருப்பதால் இன்று பிற்பகல் 100 அடியை எட்டியது.

மழைப்பொழிவு இதே நிலை நீடித்தால் இன்னும் சில தினங்களில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுப்பணித்துறையினர் அணைப்பகுதியில் முகாமிட்டு தீவிரமாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆழியாறு அணை 100 அடியை எட்டியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த டுவிட்டர் செய்தியால் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டனரா? என நெட்டிசன்கள் தொடர்ந்து ஏவுகனை கேள்விகள் எழுப்பியதால் அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக அடுத்த டுவிட் ஒன்றை லலித் மோடி போட்டு விட்டார்.

அந்த பதிவில், ‘நாங்கள் இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் தான் செய்து வருகிறோம். விரைவில் அதுவும் ஒருநாள் நடக்கலாம்’ என லலித் மோடி கூறியுள்ளார்.

கடந்த 2018ல் லலித் மோடி தனது மனைவியை விவாகரத்து செய்திருந்தார். இதே போல சுஷ்மிதா சென் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது பாய் பிரண்ட் ரோஹ்மனை பிரிவதாக அறிவித்திருந்தார். அதற்குள் புதிய உறவை சுஷ்மிதா தேடிக்கொண்டுள்ளார். தற்போது லலித் மோடியின் ட்விட்டை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Views: - 413

0

0