சாதியை பற்றி பேசினேனா..? அதுக்கு அர்த்தம் தெரியாமா பேசாதீங்க.. அண்ணாமலை அதிரடி ரிப்ளை…!!

Author: Babu Lakshmanan
1 June 2022, 5:40 pm
annamalai bjp - updatenews360
Quick Share

குறிப்பிட்ட சமுதாய மக்களை இழிவுபடுத்திவிட்டதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 30ம் தேதி மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவு செய்தது. இதையொட்டி, பிரதமர் மோடிக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டார்.

அதில், நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கையை நோக்கி, இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி, பறையாவில் இருந்து விஷ்வ குருவாக” 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் மாற்றி வருகிறார் பிரதமர் மோடி என, பதிவிட்டு இருந்தார்.

Annamalai Protest - Updatenews360

அவரது இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பறையர் என்ற குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை அண்ணாமலை இழிவுப்படுத்திவிட்டதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வந்தன.

இதற்கு விளக்கம் அளித்த அண்ணாமலை, மேக்மில்லன் சொல் அகராதிப்படி, பறையா என்ற சொல்லின் பொருள், ஒரு நபராலோ, அமைப்பாலோ, நாட்டாலோ வெறுக்கப்படுபவர், எனக் கூறினார். இதனிடையே, பறையர் சமூக அமைப்பினரும் அண்ணாமலைக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், இந்த விவகாரத்தை எதிர்கட்சியினர் விட்டபாடில்லை. இந்த நிலையில், அண்ணாமலை மற்றுமொரு விளக்கத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது:- பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிக்கை சகோதர சகோதரிகள் நான் ஒரு பதிவில் பயன்படுத்திய ‘pariah’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டிருந்தார்கள்!

நான் ‘Pariah’ எனும் பதத்தை பயன்படுத்தினேனே அன்றி, Pariar எனும் பதத்தை அன்று. பின்னது ஹிந்து சமுதாயத்தின் மிகவும் மதிக்கப்படும் அங்கமான சிவ சாம்பவ சமுதாயத்தைக் குறிக்கும் என்பதை அறிவேன். அவர்கள் ஆனையேறும் பெரும் பறையர் என்றே ஹிந்து சனாதன சமயத்தில் அழைக்கப்படுகிறார்கள்.

இதை அறிந்த நான் Pariah என்பதை சமூக இழுக்காக பயன்படுத்தினேன் என சொல்வது விஷமத்தனமானது உள்நோக்கம் கொண்டது. சத்யமேவ ஜெயதே!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 715

0

0