மீண்டும் மொழி சர்ச்சையை கிளப்பிய பாலிவுட் நடிகர்.. இந்தியை தேசிய மொழியாக மதிக்க வேண்டும் என கருத்து.!

Author: Rajesh
24 May 2022, 11:31 am
Quick Share

சமீப காலமாக இந்தி தேசிய மொழியா இல்லையா என்பது குறித்து ட்டுவிட்டர் பக்கத்தில் பல கருத்து மோதல்கள் எழுந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் இந்தி தேசிய மொழியா இல்லையா என்பது குறித்து கன்னட நடிகர் கிச்சா சுதீப்பும், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

அந்த பிரச்சனை ஒரு வழியாக முடிவடைந்து வரும் நிலையில் மீண்டும், இந்தி மொழி குறித்து பாலிவுட் நடிகரான அர்ஜுன் ராம்பால் தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு இந்தியா. பல மொழிகள், கலாசாரங்கள், பண்டிகைகள், மதங்கள் என வண்ணமயமான நாடு இந்தியா. நாம் அனைவரும் இங்கு நிம்மதியுடனும், மகிழ்வுடனும் வாழ்ந்து வருகிறோம்.

நான் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன் இந்தியை நமது தேசிய மொழி என நான் கருதுகிறேன். அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில் ஹிந்தி மொழி அதிகம் பேசப்பட்டும், புரிந்து கொள்ளப்பட்டும் வருகிறது. ஆனால் வேறு எந்த மொழியையும் அது கொண்டு போகவில்லை என தெரிவித்துள்ளார். இவர் கருத்து தெரிவித்த நிலையில் வழக்கம் போல் ட்டுவிட்டரில் பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Views: - 442

0

0