பால் விலையை குறைக்க முடியல.. ஃபார்முலா கார் ரேஸ் ரொம்ப அவசியமா? திமுகவை விமர்சித்த ஜெயக்குமார்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2023, 5:07 pm
jj
Quick Share

பால் விலையை குறைக்க முடியல.. ஃபார்முலா கார் ரேஸ் ரொம்ப அவசியமா? திமுகவை விமர்சித்த ஜெயக்குமார்!!

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அதிமுக ஹீரோ, திமுக ஜீரோ. இந்த அரசை யாரும் விரும்பவில்லை. ஆட்சி என்றால் விமர்சனங்கள் இருக்கதான் செய்யும். அதற்காக விமர்சித்தவர்களை குண்டாஸில் போடுவது தவறு.

கார் ரேஸை அரசு பணத்தில் நடத்துவது தவறு. அரசு பணம் என்பது சிவன் சொத்து, சிவன் சொத்தை எடுத்தால் குலநாசம். ஒரு வேளை சோற்றுக்கு மக்கள் கஷ்டப்படுகிற போது, யாருடைய பணத்தில் இந்த கார் ரேஸை நடத்துகிறீர்கள்? என்றும் தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் மேம்படுத்துவதற்காக திமுக அரசு என்ன செய்திருக்கிறது எனவும் கேள்வி எழுப்பிய அவர், கார் ரேஸ் நடத்துவதாகக் கூறி சாலைகளை நாசம் செய்துள்ளது திமுக அரசு என கடுமையாக விமர்சித்தார்.

பால் விலையை குறைக்க முடியல. இதுல ஃபார்முலா கார் ரேஸ் ரொம்ப அவசியமா உங்களுக்கு? எனவும் கேட்டுள்ளார். இதை தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக இன்னும் மூன்றே மாதத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் மெகா கூட்டணி அமையும்.

பாஜகவுடன் எந்த தேர்தலிலும் கூட்டணி என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு திமுகவின் கதையை மக்கள் முடிக்கப் போறாங்க.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியை பெறப் போகிறது. அதேபோல, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம். இதற்கான பணிகள் எல்லாம் நடந்து வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிமுகவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Views: - 136

0

0