அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் இருந்து வெளியேறிய பிரபலம்? ரசிகர்கள் அதிர்ச்சி.!

Author: Rajesh
5 July 2022, 10:59 am
Quick Share

இந்த வருடம் இந்திய சினிமாவில் வசூல் வேட்டை நடத்திய படங்களில் ஒன்று தெலுங்கு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா, பகத் பாசில் நடிக்க வெளியான இப்படம் ரூ. 200 பட்ஜெட்டில் தயாரானது. ஆனால் படத்தின் வசூலோ பெரிய அளவில் இருந்தது, அதாவது ரூ. 355 முதல் ரூ. 365 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளது. இதில் நடிகை சமந்தா ஆடிய ஸ்பெஷல் பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கிறது, இப்போதும் ஹிட் லிஸ்டில் உள்ளது.

இரண்டாம் பாகத்தில் பகத் பாசில் மற்றும் அல்லு அர்ஜுனின் மோதல் எப்படி இருக்கப்போகிறது என்ற விறுவிறுப்பான காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்க இப்போது ஒரு ஷாக்கிங் தகவல் வந்துள்ளது. அதாவது இரண்டாம் பாகத்தில் இருந்து நடிகர் பகத் பாசில் சில காரணங்களால் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வருகிறது. ஆனால் சில தகவல்கள் பகத் பாசில வெளியேறவில்லை, விஜய் சேதுபதி இணைந்துள்ளார் என்கின்றனர்.

விஜய் சேதுபதி நடிக்க வந்தாலும் பகத் வெளியேறிவிட்டார் என வந்த சில தகவல்கள் ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளன.

Views: - 415

0

0