வேளச்சேரி சாலையில் திடீரென 40 அடி பள்ளம்… சரிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு ; சிக்கித் தவிக்கும் வடமாநில ஊழியர்கள்..!!

Author: Babu Lakshmanan
4 December 2023, 10:01 am
Quick Share

சென்னையில் இருந்து 130 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் வங்கக்கடலில் மிக்ஜம் புயல் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இன்று அதிகாலையும் கனமழை நீடித்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அநாவசியமாக பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை – வேளச்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே 40 அடிக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அருகே இருந்த பெட்ரோல் நிலைய மேற்கூரையும் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 40 அடி பள்ளத்தில் சிக்கிய 5 வடமாநில தொழிலாளர்களில் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வேளச்சேரியில் அடிக்குமாடி கட்டம் ஒன்று தரையில் இறங்கியதாக கூறப்படுகிறது. பலர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து ஏற்பட்ட இடத்திற்கு தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்துள்ளனர். இருவர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Views: - 310

0

0