‘கண்ணை மூடு ஸ்பெஷல் கிஃப்ட் தரேன்’: வருங்கால கணவனை கத்தியால் குத்தி சர்ப்ரைஸ் கொடுத்த மணமகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2022, 2:13 pm
Bride Attack Groom -Updatenews360
Quick Share

ஆந்திரா : திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகனை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த மணமகள் மருத்துவமனையில் மலைமீது இருந்து தவறி விழுந்து விட்டதாக நாடகமாடிய அவலம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனகா பள்ளியை சேர்ந்த பிஹெச்டி மாணவி புஷ்பாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் இருந்து திருமணத்தை முன்னிட்டு ஊர் திரும்பிய ராமகிருஷ்ணாவை நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி வைத்துக் கொண்டாடலாம் என்று மலைப்பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றார் புஷ்பா.

அங்கு இரண்டு பேரும் சில மணி நேரங்களை ஜாலியாக செலவிட்டனர். அதன் பின்னர் உனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க போகிறேன். எனவே உன் கண்ணை இப்போது கட்டுகிறேன் என்று கூறிய புஷ்பா ராமகிருஷ்ணன் கண்ணை தன்னுடைய துப்பட்டாவால் கட்டினார்.

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமகிருஷ்ணா கழுத்தை அறுத்து அவரை கொலை செய்ய முயன்றார். இந்த நிலையில் அலறித் துடித்த ராமகிருஷ்ணாவை பார்த்து சற்று மனம் மாறிய புஷ்பா அவரை தன்னுடைய ஸ்கூட்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

மருத்துவமனையில் டாக்டர்களிடம் நாங்கள் இரண்டு பேரும் மலை மீது உள்ள பாபா கோவிலில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தோம். அப்போது கால் தவறி ராமகிருஷ்ணா கீழே விழுந்துவிட்டார். எனவே காயம் ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்.

ஆனால் மருத்துவர்கள் பெண் சொல்வதற்கும், காயத்திற்கும் சம்பந்தமில்லை என்பதை உணர்ந்து அவருடைய பேச்சை நம்பவில்லை. எனவே இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்தது.

விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையின் போது ராம கிருஷ்ணாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாத காரணத்தால் அவரை கொலை செய்ய முயற்சித்து நாடகமாடியது பற்றி தெரிவித்தார். புஷ்பாவை கைது செய்த போலீசார் மேலும் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிச்சயக்கப்பட்ட திருமணம் என்றால் மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என ஏதோ ஒரு காரணம் சொல்லி திருமணத்தை நிறுத்தி விடலாம். ஆனால் மாப்பிள்ளையை கொல்ல முயற்சித்த இந்த சம்பவம் திருமணமாகாத ஆண்களிடையே சற்று பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 804

0

0