மதுரை சித்திரை விழா பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
23 April 2022, 6:01 pm
Quick Share

சென்னை : மதுரை சித்திரைத்‌ திருவிழா பாதுகாப்புப்‌ பணியின்‌ போது மாரடைப்பால்‌
உயிரிழந்த காவல்‌ உதவி ஆய்வாளர்‌ நாட்ராயன்‌ குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டம்‌, வடக்கிப்பாளையம்‌ காவல்‌ நிலையத்தில்‌ காவல்‌ உதவி ஆய்வாளராகப்‌ பணியாற்றிய திரு.நாட்ராயன்‌ அவர்கள்‌, மதுரை சித்திரைத்‌ திருவிழா பாதுகாப்புப்‌ பணியில்‌ இருந்தபோது. கடந்த 19-4-2022 அன்று, இரவு சுமார்‌ 10.30 மணியளவில்‌ மாரடைப்பால்‌ உயிரிழந்துள்ளார்‌.

இந்த செய்தியை அறிந்த முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ உயிரிழந்த காவல்‌ உதவி ஆய்வாளர்‌
நாட்ராயன்‌ அவர்களின்‌ குடும்பத்தாருக்கு தனது இரங்கலைத்‌ தெரிவித்துக்‌ கொண்டதோடு, உடனடியாக முதலமைச்சரின்‌ பொதுநிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம்‌ ரூபாய்‌ நிவாரணம்‌ வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 486

0

0