ஆளுநர் ஆபிஸில் இருந்து வந்த திடீர் போன் கால்… உடனே சட்டசபையில் நல்ல செய்தியை சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
4 May 2022, 4:37 pm
Quick Share

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைக் கூறி, தனிப்பெரும்பான்மையும் திமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆக உள்ள நிலையிலும் நீட் தேர்வை ரத்து செய்யாதது எதிர்கட்சிகளிடையே கடும் விமர்சனத்தை எழச் செய்துள்ளது.

NEET -Updatenews360

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், 2வது முறையாக மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனையும் ஆளுநர் கிடப்பில் போட்டதால் திமுகவிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Neet CM And Governor- Updatenews360

இதற்காக ஆளுநரை அமைச்சர்களும், முதலமைச்சர் ஸ்டாலினும் அடுத்தடுத்து சந்தித்து பேசினர். மேலும், மத்திய அமைச்சர்களையும், குடியரசு தலைவரையும் சந்தித்து மனுவும் கொடுத்து விட்டனர். அதுமட்டுமில்லாமல், உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், மசோதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நீட் தேர்வை ரத்து செய்து, தேர்தல் வாக்குறுதியை எப்படியாவது நிறைவேற்றி, மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளை எப்படி சமாளிப்பது என்பதும் ஆளும் கட்சியினரிடையே பெரிய எண்ணமாக இருந்திருக்கும்.

CM Stalin Bill -Updatenews360

இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பியுள்ளதாக, அவரின் தனி செயலாளர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு இதனை கூறினார்,” என்று தெரிவித்துள்ளார்.

நீட் விவகாரத்தில் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழக அரசியல் கட்சியினர் எதிர்பார்த்துள்ளனர்.

Views: - 731

0

0