சென்னை மக்களுக்காக களத்தில் இறங்கிய கோவை அதிமுக : முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2023, 6:30 pm
SPV
Quick Share

சென்னை மக்களுக்காக களத்தில் இறங்கிய கோவை அதிமுக : முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள்!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தெங்கியதால், வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சென்னையின் பல்வேறு பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், மழைநீர் வடியாத பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பணியில் மத்திய, மாநில பேரிடர் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள், பிரபலங்கள் என பலர் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவுறுத்தலின் பேரில், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு தேவையான அரிசி, பால், ரொட்டி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கோவை மாவட்ட அதிமுக சார்பாக அனுப்பி வைத்தனர்.

Views: - 113

0

0