அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி… புகாரளித்தும் கண்டுகொள்ளாத காவல்துறை… பாதிக்கப்பட்டவர்கள் வேதனை..!

Author: Babu Lakshmanan
22 June 2022, 8:59 am
Quick Share

கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தம்பதியினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

கோவை கணபதி, வ.உ.சி.நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர், அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடமும் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டுகின்றனர். நேற்று மாலை மோசடியில் ஈடுபட்ட தம்பதியர் வீட்டின் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது, காவல்துறையினர் மோசடி செய்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்தும் போலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

மேலும் நீண்ட போராட்டத்துக்கு பின் பட்டதாரிகளின் பட்டம், மதிப்பெண் சான்றிதகள் நேற்று இரவு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், காவல் துறையினரால் தற்போது வரையில் மோசடியில் ஈடுபட்ட தம்பதியர்கள் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 381

0

0