தாறுமாறாக ஓடிய இரும்பு கம்பி லோடு ஏற்றி வந்த டெம்போ… 43 ஆடுகள் உடல் நசுங்கி பலியான சோகம்..!!

Author: Babu Lakshmanan
11 May 2022, 2:19 pm
Quick Share

கோவை வழுக்கல் அருகே சாலையில் சென்ற ஆடுகள் மீது இரும்பு கம்பிகள் ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 43 ஆடுகள் பலியாகின.

கோவை சூலூர் கலங்கல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனக்கு சொந்தமாக 400 ஆடுகளை கேரளாவில் இருந்து நாகராஜ், ஆறுமுகம் , முத்து ஆகிய மூன்று பேர் மூலம் கோவை சூலூர் நோக்கி சாலையில் அழைத்து வந்துள்ளனர்.

அப்போது கோவை வழுக்கல் வளைவு அருகே வந்த போது, எதிரே சூலூரில் இருந்து இரும்பு கம்பி லோடு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற ஆடுகள் மீது மோதியது. இந்த விபத்தில் 43 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. 15 ஆடுகள் காயமடைந்துள்ளன. மற்ற ஆடுகள் பயந்து சாலை அருகே இருந்த காட்டுக்குள் இறங்கியது.

இந்த விபத்தில் ஆடுகளை ஓட்டிவந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை. விபத்து தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுநரான கேரளா மாநிலம் ஒத்தப்பாலத்தை சேர்ந்த முகமது ரம்மி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 507

0

0