தூய்மை பணியின் போது அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ஆட்சியர் : பெண் அதிகாரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2022, 1:30 pm
Woman Official Dizy - Updatenews360
Quick Share

விழுப்புரம் : தூய்மைப் பணியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி கேட்ட போது பெண் அதிகாரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன் எல்லிஸ் சத்திரம் சாலை ஓரமாக உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள விழுப்புரம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

மேலும் நீர்வழிப் போக்குவரத்து களான கால்வாய்கள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட விழுப்புரம் வட்டாட்சியர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து சாலை ஓரமாக குப்பை கொட்டுதல் மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு மேற்கொள்பவர்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தி நீர் நிலை அருகே காலியாக உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் மியாவாக்கி முறையில் அடர் காடுகளை வளர்த்திட பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதார அமைப்பு அலுவலக பெண் அதிகாரி தேவியிடம் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை கேட்டறிந்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் அடுக்கடுக்காக கேள்வி கேட்டதால் பெண் அதிகாரி படபடப்பாக காணப்பட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அந்த இடங்களை பார்வையிட்ட பின் அங்கிருந்து சென்றவுடன் பெண் அதிகாரி தேவி சாலையிலேயே மயங்கி விழுந்ததார்.

இதனைக்கண்ட அலுவலர்கள் மற்றும் துப்புரவுபப் பணியாளர்கள் தேவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரத்த அழுத்தம் காரணமாக பெண் அதிகாரி மயங்கி விழுந்த சம்பவம் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 535

0

0