வாடகைக்கு இருந்த வீட்டை எழுதி கொடுக்க சொல்லி மிரட்டல்: திமுக பிரமுகர் மீது ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு…!!

Author: Rajesh
7 March 2022, 5:08 pm
Quick Share

கோவை: திமுகவை நிர்வாகிகள் தனது சொத்தை எழுதிக் கொடுக்க கூறி மிரட்டி வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் ஜெகநாதன் என்பவர் புகார் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெகநாதன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ஆர்எஸ் புரம் பகுதியில் எனக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீடு எனது பெயரிலேயே இருக்கிறது.

இந்தநிலையில் திமுகவைச் சேர்ந்த மலைச்சாமி என்பவருக்கு அந்த வீட்டை வாடகைக்கு கொடுத்து இருந்தேன். ஆனால் முறையாக வாடகை தரவில்லை. தொடர்ந்து வீட்டை காலி செய்யுமாறு கூறினேன். இந்த நிலையில் மலைச்சாமி மற்றும் சித்ரா என்ற பெண் இருவரும் சேர்ந்து வீட்டை எழுதிக் கொடுக்க கூறுகின்றனர்.

மேலும் அரசியல்வாதிகள் என்று கூறி தினமும் எனக்கு போன் செய்து மிரட்டுகின்றனர். எனது வீட்டை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Views: - 642

0

0