‘ஒரு பாலியல் குற்றவாளி மதிப்புமிக்க தலைவரை பற்றி விமர்சிக்க அருகதையே கிடையாது’ : சீமானை சீண்டிய காங்கிரஸ் எம்பி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2022, 10:31 pm
Seeman Jothimani - Updatenews360
Quick Share

சென்னையில் நிருபர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜிவ் என்ன பெரிய தியாகியா? ரூ.400 கோடி பீரங்கி ஊழல் செய்தவர். போபால் விஷவாயு உயிரிழப்புக்கு காரணம் யார்? ஆண்டர்சனை தப்பிக்க வைத்தது யார்? ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை செய்துள்ளார்.

தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்து விட்டேன் என ராகுல் கூறியுள்ளார். ஆனால், அவர் யார் எங்களை மன்னிக்க? நீங்கள் செய்த கொடுஞ்செயல்களை நாங்கள் மன்னிக்க தயாராக இல்லை என கூறினார்.

Seeman's tale of controversies...Then on KT Raghavan's sleaze video and now  on actor Vadivelu and DMK! | The New Stuff

இவரது பேச்சு காங்கிரஸ் நிர்வாகிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சீமான் சொல்வது போல் முன்னாள் பிரதமர் ராஜிவ், இலங்கை தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றே வைத்து கொள்வோம். ஆனால், இலங்கை தமிழர்களுக்கு சீமான் என்ன செய்தார்? துடுக்குத்தனமாக பேசுவதை சீமான், நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நாங்கள் பேசுவது வேறு விதமாக இருக்கும். சீறுவது போல் வாயை திறக்கலாம். சீற்றம் வராது. காற்றுதான் வரும்.

jothimani | jothimani Latest Tamil News Updates, Videos, Photos | Vikatan

வேடிக்கையாக பேசுவதில் சீமான் வல்லவர். அவர் பேச்சில் வேடிக்கை மட்டுமின்றி, அறியாமையும், பிதற்றலும் இருக்கும். முன்னாள் பிரதமர் ராஜிவ்க்கு நற்சான்றிதழ் வழங்கும் உயர்ந்த இடத்தில் சீமான் இல்லை. யார் தியாகி , தியாகி இல்லை என்பதை அவர் கூறக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது ட்விட்டர் பதிவில், சீமான் ஒரு பாலியல் குற்றவாளி. சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர், தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயகன், தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது என தெரிவித்துள்ளார்.

Views: - 666

0

0