பல பெண்களுடன் தொடர்பு… கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்திய கணவன் : இரண்டு மகள்களுடன் நீதி கேட்டு போராடிய பெண்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2022, 2:14 pm
Tirupur Women Dharna -Updatenews360
Quick Share

திருப்பூர் : தனது கணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வரும் நிலையில், அவரிடம் உரிய இழப்பீடு பெற்றுத் தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் இளம் பெண் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் ஆத்துபாளையத்தை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 36). இவர் நேற்று தனது மகள்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் பத்மாவதியிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து பத்மாவதி போலீசாரிடம் கூறியதாவது:- எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம். எனது கணவர் பரந்தாமன். நாங்கள் இருவரும் திருப்பூர் ஆத்துப் பாளையத்தில் வசித்து வந்தோம். எங்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

இருவரும் பனியன் நிறுவனங்களில் வேலை செய்து குடும்பத்துடன் இருந்து வந்தோம். இந்நிலையில் எனது கணவர் பரந்தாமனுக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நான் கேட்கும் போது எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் என்னை அவர் அடித்து கொடுமைப் படுத்தி துன்புறுத்தி வந்தார். இந்நிலையில் இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் அப்போது அதிகாரிகள் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் என்னுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் அதற்கு சற்று கால அவகாசம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். எனவே என்னை ஏமாற்றிய கணவர் மற்றும் அவரது கள்ளக்காதலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது மகள்களின் வாழ்க்கை கருத்தில் கொண்டு பரந்தாமனிடம் இருந்து எனக்கு உரிய இழப்பீடு தொகை பெற்று தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 845

0

0