இட்லி, தோசைக்கு செம சூப்பரான காம்பினேஷன்… ஆந்திரா ஸ்டைல் தக்காளி, வேர்க்கடலை சட்னி!!!

8 March 2021, 12:01 pm
Quick Share

டிபன் என்றாலே பெரும்பாலும் செய்யப்படுவது இட்லி, தோசை தான். இதற்கு சட்னி, சாம்பார் என்று சைட் டிஷ் எடுத்து கொள்வோம். பல வகையான சட்னி ரெசிபிகளை நாம் இதற்கு முயற்சி செய்து பார்க்கலாம். அந்த வகையில் ஆந்திரா ஸ்டைலில் தக்காளி, வேர்க்கடலை சட்னி எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம். இது கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் ஒரு ரெசிபியாக இருக்கும். 

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை – 1/4 கப்

வரமிளகாய் – 3

எண்ணெய் – 1 தேக்கரண்டி

பூண்டு – 2

சின்ன வெங்காயம் – 5

தக்காளி – 2

புளி – சிறிய துண்டு

உப்பு – சுவைக்கேற்ப

தண்ணீர் – தேவையான அளவு

தாளிக்க:-

எண்ணெய் – 2 தேக்கரண்டி

கடுகு – 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

*சட்னி செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வேர்க்கடலை மற்றும் வரமிளகாயை போடவும்.

*இரண்டையும் கருகி விடாமல் பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

*பிறகு இதே கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் வதக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து அது சாஃப்டாக மாறும் வரை நான்கு நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.

*இந்த கலவையில் புளி, வேர்க்கடலை மற்றும் வர மிளகாய் சேர்த்து கலந்து விடவும். 

*பிறகு இவற்றை ஒரு தட்டில் கொட்டி நன்கு ஆற விடவும்.

*அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து கொள்ளவும்.

*அடுத்து ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காய பொடி சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டவும்.

*அவ்வளவு தான்… செம டேஸ்டான ஆந்திர ஸ்டைல் தக்காளி, வேர்க்கடலை சட்னி தயார்.

Views: - 15

0

0