மாட்டு மூத்திரம் சர்ச்சை… திமுக எம்பி செந்தில்குமாருக்கு ஆதரவுக்கரம் நீட்டிய காடுவெட்டி குருவின் மகள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2023, 5:56 pm
Viruthambigai
Quick Share

மாட்டு மூத்திரம் சர்ச்சை… திமுக எம்பி செந்தில்குமாருக்கு ஆதரவுக்கரம் நீட்டிய காடுவெட்டி குருவின் மகள்!!!

செந்தில்குமார் வன்னியர் என்பதால் வன்மத்தோடு சிலர் சமூக வலைதளங்களில் அவரை இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என காடு வெட்டிகுருவின் மகள் கூறியுள்ளார்.

இது குறித்து காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை விடுத்துள்ள பதிவில், ”பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் அண்ணன் டாக்டர் திரு. செந்தில் குமார் (தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்கள் தவறுதலாக சில வார்த்தைகளை பேசி உள்ளதாக சிலர் குறிப்பிடுகின்றனர். அவரே அவர் பேசிய வார்த்தைகள் தவறு என்று கூறி தான் பேசிய வார்த்தைகளை திரும்ப பெற்றுள்ளார். மேலும் பாராளுமன்ற அவைக்குறிப்பில் இருந்தும் தான் பேசிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று அவை தலைவருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இவ்வாறு இருக்கும் பொழுது அண்ணன் டாக்டர் திரு.செந்தில் குமார் அவர்கள் வன்னியர் என்பதால் வன்மத்தோடு சிலர் சமூக வலைதளங்களில் அண்ணன் அவர்களை இழிவு படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.அவர் பேசியது தவறு என்றால் அவர் பேசிய கருத்துக்கு எதிர்வினை ஆற்றுங்கள் அவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அண்ணன் அவர்களுக்கு மற்றவர்கள் எவ்வளவு அழுத்தத்தை கொடுத்தாலும் வன்னிய குல சத்திரியர்களாக நாங்கள் அண்ணன் அவர்களுக்கு துணையாக நிற்போம்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வட மாநிலங்கள் குறித்து செந்தில்குமார் எம்.பி. கூறிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையானதை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலினே நேரடியாக அவரை தொடர்பு கொண்டு கடுமையாக கண்டித்ததால் செந்தில்குமார் தனது கருத்தை வாபஸ் பெற்று மன்னிப்புக் கோரினார்.

Views: - 315

0

0