வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது : முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பு

Author: Babu Lakshmanan
3 June 2022, 9:28 am
Quick Share

சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்த நாளையொட்டி, ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, கருணாநிதியின் 99வது பிறந்த நாள் இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா அறிவாலயத்திலும், கோபாலபுரம் இல்லத்திற்கு முன்பும் வைக்கப்பட்ட கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனிடையே, திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தியாகராய நகரில் உள்ள ஆரூர்தாஸின் வீட்டுக்கு நேரில் சென்று இந்த விருதை வழங்கினார்.

பாசமலர், விதி, வேட்டைக்காரன், அன்பே வா உள்ளிட்ட படங்கள் உள்பட முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் ஆரூர் தாஸ்.

Views: - 622

0

0