கடைசியில ஷாருக்கான் இப்படி பண்ணிட்டாரே.. கடும் மன வருத்தத்தில் அட்லி.?

Author: Rajesh
16 May 2022, 7:53 pm
Quick Share

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அட்லி, அதனை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இணைந்தார்.

அட்லி அதிக செலவு செய்கிறார். எடுக்கிற காட்சிகளில் பல காட்சிகள் பயன் படுத்துவதில்லை, பழைய படங்களை காப்பியடிக்கிறார் என அவர், மீது நிறைய புகார்கள் கூறப்பட்டாலும், விஜய்யின் மார்க்கெட் உயர்ந்ததற்கு அவருக்கு முக்கிய பங்கு உண்டு என்றே கூறலாம்.

இதனிடையே தற்போது நடிகர் ஷாருக் கானை வைத்து லைன் என்ற படத்தை இயக்கி வருகிறார், அப்படத்தில் அவருடன் நடிகை நயன்தாரா ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் நயன்தாரா மட்டுமில்லாமல் மூன்று கதாநாயகிகள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து ஓரளவு படம் முடிவடைந்த நிலைமையில் ஷாருக்கான் படத்தை பார்த்துள்ளார். சில காட்சிகள் சரியாக அமையவில்லை. மறுபடியும் ரீடேக் போகலாம் என்று கூறியுள்ளாராம். தமிழ் சினிமாவில் கொஞ்சம் கவனம் செலுத்த இருந்தவருக்கு அவர், இப்படி கூறியது கொஞ்சம் மனவருத்தத்தை தான் தந்திருப்பதாகவே தகவல் வெளிவந்துள்ளன.

Views: - 801

0

0