10 வருஷத்துக்கு அப்புறமும் இன்னும் திமுக திருந்தவே இல்லை… மக்களுக்கு என்ன செய்தார்கள்? திமுக ஆட்சி குறித்து டிடிவி தினகரன் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2022, 8:46 pm
TTV Dinakaran - Updatenews360
Quick Share

தி.மு.க பதவிக்கு வந்த கொஞ்ச காலத்துக்காவது நல்லது செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள் என டிடிவி தினகரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் திமுகவின் ஒரு ஆண்டுகால ஆட்சி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சி அவர்கள் விளம்பரப்படுத்திக் கொள்வதைப் போல சாதனையல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கு தினம் தினம் சோதனையாகவே அமைந்திருக்கிறது.

தி.மு.க பதவிக்கு வந்த கொஞ்ச காலத்துக்காவது நல்லது செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படி எந்த அறிகுறியும் இந்த ஆட்சியில் தெரியவில்லை காரணம் தி.மு.க இன்னும் மாறவில்லை, இன்னும் திருந்தவில்லை,
மக்களை ஏமாற்றும் மனப்பான்மை இவர்களை விட்டு விலகவில்லை என்பதைத்தான் இந்த ஓராண்டு கால ஆட்சி நமக்கு சொல்லும் செய்தி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அது போலத்தான், இந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சிக்கு கடந்த ஓராண்டு காலம்தான் உதாரணம்!’ என தெரிவித்துள்ளார்.

Views: - 653

0

0