நரிக்குறவர்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை… இபிஎஸ், அண்ணாமலை எல்லாம் ஒரு பைத்தியம்.. திமுக பெண் நிர்வாகி சர்ச்சை பேச்சு!!

Author: Babu Lakshmanan
17 June 2022, 9:16 am
Quick Share

திருவள்ளூர் : நரிக்குறவர்களால் திமுகவுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்று திமுக பெண் நிர்வாகி சேலம் சுஜாதா பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நகர்மன்றத் தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் ஏற்பாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் திமுக மாநில மகளிர் அணி பரப்புரை குழு செயலாளர் சேலம் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக பெண் நிர்வாகி சுஜாதா, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை பைத்தியம் எனக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டத்தில் பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பைத்தியக்காரன் என்றும், நன்றாக நடித்தவர் தற்போது விஜயகாந்த்க்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றும் கூறினார். மேலும், பைத்தியம் போல அண்ணாமலை உளர்வதாகவும், திமுக அமைச்சர்களை திட்டுவதாகக் கூறி தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.

மேலும், நரிக்குறவர்களால் ஒரு பிரயோஜனமும் கிடையாது என்றும், வாட்ஸ்அப் செய்தியை பார்த்து அவர்கள் அழைத்ததற்கு முதல்வர் அவர்களின் வீட்டிற்கே சென்றார் என திமுக நிர்வாகி சுஜாதா பேசியது கூட்டத்தில் இருந்தவர்களையே அதிருப்தியடையச் செய்தது.

Views: - 447

0

0