வாடகை வீட்டில் போலி மதுபாட்டில் தயாரித்த கும்பல்… 1700 போலி மது பாட்டில்கள் பறிமுதல்.. 5 பேர் கைது… தனிப்படை போலீசார் அதிரடி

Author: Babu Lakshmanan
16 April 2022, 4:40 pm
Quick Share

திருச்சி அருகே வாடகை வீட்டில் போலி மதுபான பாட்டில்கள் தயார் செய்த கும்பல் மடக்கிப் பிடித்த மது அமலாக்க தனிப்பிரிவு காவல்துறையினர், 1700 போலி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் செட்டிஊரணிபட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது வீட்டை காரைக்காலை சேர்ந்த சௌந்தரராஜன் கார்த்திக் (35) என்பவர வாடகைக்கு எடுத்துள்ளார். இவருடன் திருவாரூரை சேர்ந்த பாலமுருகன் (32), வெற்றிச்செல்வன் (22), விஜயகுமார் (23) சூர்யா (25) ஆகியோரை வைத்து போலி மதுபானங்களை தயாரித்துள்ளனர். அதற்கு, போலி லேபிள்களை பாட்டில்களில் ஒட்டி திருச்சி சுற்றுவட்ட மாவட்டங்களுக்கு கள்ள மார்க்கெட்டில் கார்த்திக் மதுபானங்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.

இது குறித்து மது அமலாக்க தனிப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தங்கள் பெயரில் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையிலான நேற்று இரவு அதிரடியாக அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை செய்தனர். அப்போது கார்த்திக், பாலமுருகன், வெற்றி செல்வன், சூர்யா, விஜயகுமார் ஆகிய 5 பேரும் போலி மதுபானங்களை பாட்டிலில் நிரப்பி ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டிருந்தபோது பிடிபட்டனர்.

அவர்களிடம் இருந்து ஆயிரத்து 700 மதுபான பாட்டில்கள் கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி முத்தரசு தலைமையில் திருவெறும்பூர் மதுவிலக்கு ஆய்வாளர் மீராபாய் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதோடு தப்பி ஓடிய வீட்டின் உரிமையாளர் வெள்ளசாமியைத் தேடி வருகின்றனர்.

Views: - 691

0

0