வீட்டில் தனியாக இருந்த +2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவசாயி : திருச்சி அருகே அதிர்ச்சி சம்பவம்…!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2022, 2:28 pm
Farmer Arrest - Updatenews360
Quick Share

திருச்சி : வீட்டில் தனியாக இருந்த +2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் விவசாயி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மேலரசூர் பகுதியை சேர்ந்தவர் பிச்சுமணி. இவரது மகன் முத்து (வயது 50). இப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

இன்று காலை இவர் மீது பிளஸ் 2 பள்ளி மாணவியை கற்பழித்ததாக லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாலதி விசாரணை மேற்கொண்டதில் அரசு பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி தன் வீட்டில் தனியாக இருந்த பொழுது மாணவியின் வாயை பொத்தி கற்பழித்ததாக விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து விவசாயி முத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Views: - 693

0

0