சரத் பவாருக்கு பதில் முன்னாள் முதலமைச்சர் தான் வேட்பாளர்? ஜனாதிபதி வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் பரிந்துரை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2022, 7:13 pm
President Election - Updatenews360
Quick Share

ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை முடிவு செய்ய சரத் பவார், மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழுஅமைப்பு

குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார். ஜூன் 15-ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

அதன்படி தற்போது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பிடிபி, ராஷ்ட்ரிய லோக்தளம், சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கலந்து கொண்ட நிலையில், ஆம் ஆத்மி, டிஆர்எஸ், சிரோன்மணி அகாலிதளம், தெலுங்குதேசம், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட சரத்பவாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை சரத் பவார் மீண்டும் நிராகரித்துவிட்டார் என மம்தா பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து டி.ஆர்.பாலு அவர்கள் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை முடிவு செய்ய சரத் பவார், மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு தேர்வு செய்வார்கள் என்றும், முதல்வர்கள் அடங்கிய கூட்டத்தில் ஆலோசித்து பொதுவேட்பாளர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சரத் பவார் குடியரசு தலைவர் வேட்பாளராக நிற்க மறுத்த நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பருக் அப்துல்லா பெயரும் விவாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 477

0

0