‘ஆன்மீகம் தான் தமிழை வளர்த்தது…தமிழகத்தில் காவி வலியது’: கோவையில் தெலங்கானா ஆளுநர் உரை..!!

Author: Rajesh
28 April 2022, 3:53 pm
Quick Share

ஆன்மீகம் தான் தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது என பேரூர்க் தமிழ் கல்லூரி முப்பெரும் விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையாற்றியுள்ளார்.

கோவை பேரூர் பகுதியில் உள்ள தமிழ்கல்லூரியில் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி மற்றும் தேசிய சிந்தனைக்கழகம் (அகில பாரத பிரக்ஞா பிரவக்கின் தமிழக கிளை) இணைந்து நடத்தும் முப்பெரும் விழா(சுபகிருது ஆண்டு பிறப்பு, அம்பேத்கர் பிறந்தநாள், 75ம் ஆண்டு சுதந்திரதின பெருவிழா) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தெலுங்கான ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார் கெளமார மடாலயம் குமரகுருபர அடிகளார் நிகழ்ச்சியுரை ஆற்றினர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழிசை செளந்தரராஜன், அனைவருக்கும் தமிழ் வணக்கம் என கூறி உரையை துவக்கினார். அனைத்து ஊருக்கும் பேர் இருக்கும் பேருக்கே ஊராக இருப்பது பேரூர் என தெரிவித்தார். தமிழிடமிருந்து எங்கெல்லாம் அழைப்பு வருகிறதோ அங்கெல்லாம் தமிழிசை வருவேன் எனவும் கூறினார். இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி.

இங்கு சாந்தலிங்க ராமசாமி அடிகளாரும் தொண்டாற்றி வருவதாக அறிந்தேன். எனவே ஒரு ராமசாமி மட்டும் தமிழுக்கு சேவை செய்யவில்லை. பல ராமசாமிகள் சேவை செய்துள்ளதாக கூறினார். பெண்களை வளர்ச்சியை வைத்து தான் நாட்டின் வளர்ச்சியை குறிபிட முடியும் என சொன்னால் இங்கு ஆண்களுக்கு சமமாக பெண்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

75 ஆண்டு சுந்தந்திர தினத்தை ஓராண்டாக கொண்டாட உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிபித்தார். தற்போது உள்ள இளைஞர்களுக்கு சுதந்திரம் குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக பிரதமர் இவ்வாறு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சுதந்திரத்திற்காக பல சுதந்திர வீரர்களை கண்டது இந்த தமிழ்நாடு எனவும் தெரிவித்தார். ஆன்மீகத்தை விடுத்து தமிழ் வளர்ச்சி கிடையாது என கூறிய அவர் ஆன்மீகம் தான் தமிழை வளர்த்தது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது எனவும் தெரிவித்தார்.

தமிழால் கோவில் கதவுகள் திறந்ததையும் தமிழால் கோவில் கதவுகள் மூடியதையும் நாம் பார்த்துள்ளதாக தெரிவித்த அவர் தமிழால் அனைத்தும் முடியும் என்பதை உணர்த்தியது மடங்கள் என தெரிவித்தார். ஆன்மீகம் இல்லாமல் தமிழ் கிடையாது. தமிழ் கிடையாமல் ஆன்மீகம் கிடையாது என்பதை உணர்த்தியது மடங்கள் எனவும் கூறினார்.


என்னை பற்றி யார் என்ன சொன்னாலும் என்ன எழுதினாலும் நான் துணிச்சலோடு இருக்கிறேன் அதற்கு காரணம் நான் மக்கள் சேவை தமிழ் சேவை ஆன்மீக சேவை செய்து வருவது என கூறினார். கருப்பை(திராவிடத்தை) மட்டுமே பேசுபவர்கள், காவியின் கருத்தை அறிய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும் கூறினார். அதே சமயம் அரசு, இவர்களை(மடாலயத்தவர்களை) அழைத்து பேசும் போது, அவர்களுக்கு உரிய இருக்கைகளை அமைத்து கொடுக்க வேண்டும் என்பது பக்தர்களாக நாங்கள் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

காவி ஆன்மீகத்தை குறிக்கிறது என கூறிய அவர் ஆகவே தான் தமிழகத்தில் காவி பெரியதாகவும் வலிமையாக உள்ளது எனவும் தெரிவித்தார். அதே சமயம் நான் தேசிய கொடியில் உள்ள காவியையும் அடிகளார்கள் அணிந்திருக்கும் காவியையும் தான் கூறுகிறேன் எனவும் விக்கமளித்தார். என்னால் முடிந்த குழந்தைகளுக்கு கல்விக்கு தேவையான உதவியை செய்கிறேன்.


பண மதிப்பிழப்பு பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களிடம் இருக்கும் பணமும் வெள்ளை எங்கள் உடையும் வெள்ளை. நான் ஒரு சிறந்த அரசியல் வாதி என தெரிவித்தார். மடாலயங்கள் மூலமாக நடத்தப்படும் கல்வி நிலையங்களுக்கு சிறப்பு கவனத்தை அரசு செலுத்த வேண்டும் என கோரிக்கை வைப்பதாகவும் அப்போது தான் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவ முடியும் என தெரிவித்தார்.

ஆளுநர்களுக்கும், முதலமைச்சருக்கும் சுமூகமான உறவாக இருக்க வேண்டும் எனவும் ஆளுநர்களும் முதலமைச்சரும் இணைந்து பணியாற்றும் பொழுது மக்கள் பலன் பெறுவார்கள் என குறிப்பிட்ட அவர் எல்லாவற்றிக்கும் எதிர்வினை ஆற்றும் போது அது வருங்கால சந்த்திக்கு பலனளிக்காது எனவும் தெரிவித்தார். மசோதாக்களின் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு நேர, காலம் எதுவும் கிடையாது எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

Views: - 694

0

0