இளம்பெண்ணுடன் தனியறையில் இருந்த முன்னாள் அமைச்சர்… புரட்டி எடுத்த மனைவி… வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
3 June 2022, 2:44 pm
Quick Share

ஓட்டலில் இளம்பெண்ணுடன் இருக்கும் முன்னாள் அமைச்சரை அவரது மனைவி வெளுத்து வாங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமாக இருந்தவர் பரத்சின் சோலாங்கி. கடந்த சில நாட்களாக இவருக்கும், அவரது மனைவி ரேஷ்மா பட்டேலுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், அவர் ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பரத்சின் சோலாங்கி ஓட்டலில் பெண் ஒருவருடன் தங்கியிருப்பதாக அவரது மனைவி ரேஷ்மா பட்டேலுக்கு தெரிய வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், சில நபர்களுடன், தனது கணவர் சோலாங்கி தங்கியிருக்கும் அறைக்கு சென்றுள்ளார். கதவை திறந்த உடன் இளம்பெண்ணுடன் கணவர் இருப்பதைக் கண்டு ரேஷ்மா ஆத்திரமடைந்துள்ளார்.

பின்னர், உன்னுடைய தந்தை வயதில் இருக்கும் இவருடன் எப்படி இங்கே இருக்கிறாய் எனக் கூறி அந்த இளம்பெண்ணுக்கு தர்ம அடி கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இன்னும் சில நாட்களில் அம்மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவரின் இந்த வீடியோ அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஹர்திக் பட்டேல், பாஜகவில் இணைந்தார். தற்போது, இந்த வீடியோ அக்கட்சிக்கு மேலும் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 716

0

0