கோடை காலத்தில் வாட்டி எடுக்கும் சிறுநீரக தொற்றுகளை தடுக்க தினம் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுங்க!!!

Author: Hemalatha Ramkumar
25 May 2023, 5:13 pm
Quick Share

ஆரஞ்சு மிகவும் இனிப்பு மற்றும் புளிப்பு சேர்ந்த சுவையுடைய ஒரு பழமாகும். இதில் ஏராளமான விட்டமின்களும் தாது சத்துக்களும் நிறைந்துள்ளன. மேலும் அதிகமாக ஆன்ட்டி-ஆக்ஸிடன்டுகளைக் கொண்டுள்ளது, இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

ஆரஞ்சு பழத்தில் பெரும்பாலும் நீச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் எடை கொண்ட ஒரு ஆரஞ்சு பழத்தில் 45 கிராம் அளவிற்கு நீர்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும்,
வைட்டமின் ஏ 1 கிராம்,
வைட்டமின் பி 40 மில்லி கிராம்,
வைட்டமின் பி2 18 மில்லி கிராம்,
வைட்டமின் சி 80 மில்லி கிராம்,
இரும்புச்சத்து 30 மில்லி கிராம்,
கரோட்டின் 1.5 கிராம்,
புரதம் 500 மில்லி கிராம்,
பாஸ்பரஸ் 25 மில்லி கிராம்,
கால்சியம் 25 மில்லி கிராம்,
கொழுப்பு 200 மில்லி கிராம் மற்றும் 500 கலோரிகள் ஆற்றல் கொண்டுள்ளது.

ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. இது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய உதவுகிறது.

தினமும் குறைந்த அளவு சர்க்கரை உடைய ஆரஞ்சு பழ ஜூஸ் குடிப்பதால் சிறுநீரகத்தில் ஏற்படும் நோய் தொற்று போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதிலும் குறிப்பாக சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கலாம்.

ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக காணப்படுகிறது. பொட்டாசியம் சத்து ரத்தத்தில் குறைவதால் இதயத்தில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பொட்டாசியம் சத்தானது நமது இதயத்தை சீராக வைத்துக் கொள்ள உதவக்கூடிய ஒன்றாகும். எனவே ஆரஞ்சு பழம் சாப்பிடுவது நமது இதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்குகிறது.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டுகள் அதிக அளவில் காணப்படுகிறது. இவை, பார்வை இழப்பை ஏற்படுத்தும் கண் நோய்களை கட்டுப்படுத்தி கண் பார்வையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் நாச்சத்து கெட்ட கொழுப்புகளை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இவற்றில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இவை உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல் செல்களை நீக்குகின்றன. இதனால் சருமத்தின் முதிர்ச்சியான தோற்றம் நீக்கப்பட்டு சருமம் பொலிவுடன் இளமையாக தோன்றுகிறது.

ஆரஞ்சு பழத்தில் இருக்கக்கூடிய ஃபோலேட் எனும் சத்து ஆண்களுக்கு விந்தணுக்களின் உற்பத்திக்கும், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் பெரிதும் உதவுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 209

0

0