உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள்… உஷாரா இருந்தா பிழைச்சுக்கலாம்!!!

Author: Hemalatha Ramkumar
26 June 2023, 1:35 pm
Quick Share

உணவின் நிறம் என்பது பார்ப்பவரை கவர்ந்து இழுத்து, அதனை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டக்கூடிய ஒரு முக்கியமான பொருள்தான். ஆனால் அது இயற்கையான நிறமாக இருந்து விட்டால் பிரச்சனை இல்லை. அதை செயற்கையாக உருவாக்கும் பொழுது ஏராளமான பிரச்சனைகள் எழுகிறது. இது தற்போது ஒரு முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

பெரும்பாலும் குளிர் பானங்கள், சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம்கள், கேக்குகள், கெலாக்ஸ், ஓட்ஸ் போன்ற காலை உணவு தானியங்களில் செயற்கை நிறம் பயன்படுத்தப்படுகிறது. பாக்டீரியா, ஈஸ்ட் மற்றும் மோல்டு போன்றவை வளராமல் தடுக்கவும், உணவு நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கவும் சேர்க்கப்படும் கெமிக்கல்களே பிரிசர்வேட்டிவ்கள் ஆகும்.

மிதமான அளவுகளில் பயன்படுத்தப்படும் பொழுது ரிசர்வேட்டிர்கள் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் அதனை அதிகமாக பயன்படுத்தும் பொழுது ஏராளமான நோய்களுக்கு வழிவகுக்கிறது. என்னதான் லேபிளில் இந்தந்த பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், 60% -ற்கும் அதிகமான பானங்களில் குறிப்பிடப்பட்டுள்ள லேபிளில் இருக்கக்கூடிய விஷயங்கள் முழுமையாக பின்பற்றப்படுவதில்லை.

டெசர்ட்கள், பியர், சாஃப்ட் ட்ரிங்க்ஸ், ஜாம், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், உறைய வைக்கப்பட்ட பால் சார்ந்த பொருட்கள் மற்றும் சுவையூட்டப்பட்ட சிரப்புகள் போன்ற உணவுகளில் எரித்ரோசைன், அலூறா ரெட், டார்டிராசின், சன்செட் எல்லோ, பிரில்லியன்ட் ப்ளூ மற்றும் இண்டிகோ கார்மைன் போன்ற செயற்கை நிறங்கள் சேர்க்கப்படுகிறது.

எந்த ஒரு பொருளையும் அதிகப்படியாக பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. அந்த வகையில் செயற்கை நிறங்களை அதிக அளவில் பயன்படுத்துவது புற்றுநோய், ஆஸ்துமா மற்றும் பல்வேறு அலர்ஜிகள் உட்பட இன்னும் எக்கச்சக்கமான நோய்களுக்கு வழி வகுக்கிறது.

அடுத்தபடியாக, உணவு கெட்டுப் போகாமல் இருப்பதற்கு பிரிசர்வேட்டிவ்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவை வயிற்று வலி, வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் சருமத்தில் தடிப்புகள் போன்றவற்றை ஏற்பட பல வாய்ப்புகள் உள்ளது. ஆகவே முடிந்தவரை பிரிசர்வேட்டிவ்கள் மற்றும் செயற்கை நிறங்கள் சேர்க்கப்படாத உணவுகளை சாப்பிடுங்கள். இதுவே நம் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள நாம் எடுக்கக்கூடிய மிக முக்கியமான முயற்சியாகும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 1964

0

0