அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வாகும் வாழைப்பழத் தோலை இனி தூக்கி எறியாதீர்கள்!!!

Author: Hemalatha Ramkumar
26 June 2023, 6:52 pm
Quick Share

நாம் எல்லாருமே எந்த ஒரு பழத்தை சாப்பிட்டாலும் பழத்தை மட்டுமே சாப்பிட்டுவிட்டு அதன் தோல் மற்றும் கொட்டைகளை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் பழங்களைப் போலவே அதன் தோல் மற்றும் கொட்டைகளிலும் ஏராளமான நன்மைகள் காணப்படுகிறது. அந்த வகையில் வாழைப்பழத் தோலின் ஒரு சில நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதனை நமது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி பலனடையலாம்.

*கைகள், பாதங்கள் போன்ற இடங்களில் மரச்சில்லுகள் அல்லது முள் குத்தி விட்டால், அந்த இடத்தில் வாழைப்பழத் தோலினை வைத்து தேய்க்கலாம். தேய்த்த பிறகு அந்த இடத்தைச் சுற்றி மெதுவாக அழுத்தம் கொடுத்து வர முள் தாமாக வெளியே வந்து விடும்.

*சொரியாசிஸ் பிரச்சனையினால் அவதிப்படுபவர்களின் சருமத்தில் சிவப்பு நிற தடிப்புகள் இருக்கும். அந்த தடிப்புகள் மீது வாழைப்பழத் தோலினை மெதுவாக தேய்க்க அதனால் ஏற்படும் எரிச்சல் மறைந்து சருமம் இயல்பு நிலைக்கு மாறும்.

*ஒரு சிலருக்கு முகத்தில் கூட மருக்கள் ஏற்படும். மருக்களை போக்க ஏதாவது வீட்டு வைத்தியத்தை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், வாழைப்பழம் உங்களுக்கான சிறந்த தீர்வு. மருக்கள் மீது வாழைப்பழத் தோலை வைத்து அதில் ஒரு துணியை கட்டி விடுங்கள். இது ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். இவ்வாறு தினமும் செய்து வர, நாளடைவில் மருக்கள் தாமாக உதிர்ந்து விடும்.

*சிறு சிறு பூச்சிகள் கடித்ததால் சருமத்தில் ஏதேனும் தடிப்பு அல்லது அரிப்பு ஏற்பட்டால் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டு எடுத்த வாழைப்பழத் தோலை அதன் மீது வைத்து வர எரிச்சல் மற்றும் அரிப்பு நீங்கும்.

*முகப்பருக்கள் மீது வாழைப்பழத் தோலை தேய்த்து வந்தால் விரைவில் பருக்கள் மறையும். வாழைப்பழத் தோலில் காணப்படும் ஒரு என்சைம் சரும துளைகளில் சென்று பாதிக்கப்பட்ட இடத்தில் செயல்புரிவதன் மூலம் முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் விரைவில் மறைய வைக்கிறது.

*தினமும் பல் துலக்கிய பிறகு காலை மற்றும் இரவு நேரத்தில் வாழைப்பழ தோலை பயன்படுத்தி பற்களை தேய்த்து வந்தால் பற்களில் இருக்கக்கூடிய கறைகள் மறைந்து, பற்கள் பளிச்சென்று மாறும். அதோடு காயங்கள் மீது வாழைப்பழத் தோலை தேய்த்தால் காயங்கள் விரைவில் ஆறும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 1889

0

0