மாதவிடாயின்போது ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கை சமாளிக்க உதவும் கை வைத்தியங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
25 November 2022, 7:22 pm
Quick Share

பெண்களாகிய நம்மால் மாதந்தோறும் மாதவிடாய் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாவிட்டாலும், மெனோராஜியா எனப்படும் அதிக இரத்தப்போக்கை நம்மால் நிச்சயமாகச் சமாளிக்க முடியும். மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு அசௌகரியத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், இரத்த சோகை, மூச்சுத் திணறல் மற்றும் கடுமையான சோர்வு போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கிறது. நீங்களும் இந்த பிரச்சனையை அடிக்கடி எதிர்கொண்டால், இதை சமாளிக்க உதவும் சில வீட்டு வைத்தியங்கள் இதோ:

ஐஸ் பேக்:
ஐஸ் பேக்கை உங்கள் வயிற்றில் 20 நிமிடங்கள் வைத்திருங்கள். நீங்கள் ஒரு நாளைக்கு பல முறை இதை மீண்டும் செய்யலாம். இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும்போது இதைச் செய்யுங்கள். இந்த செயல்முறை இரத்த நாளங்களை இறுக்குகிறது மற்றும் வலியைக் குறைக்கிறது. இது கடுமையான மாதவிடாய் ஓட்டத்தையும் குறைக்கிறது.

உங்கள் உணவில் இரும்புச்சத்து சேர்க்கவும்:
உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்படும். இரும்புச்சத்து குறைபாடு உங்கள் மாதவிடாயை மோசமாக்குகிறது. உங்கள் உணவில் இரும்புச் சேர்க்கையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கீரை, பீன்ஸ், பருப்பு, ப்ரோக்கோலி, இவை அனைத்திலும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

இலவங்கப்பட்டை தேநீர் குடிக்கவும்:
கனமான இரத்த ஓட்டத்திற்கு இலவங்கப்பட்டை ஒரு சிறந்த மூலப்பொருள். இலவங்கப்பட்டை டீயை தொடர்ந்து குடிப்பது இரத்த ஓட்டத்தை குறைக்க உதவுகிறது. இது வீக்கத்தையும் குறைக்கிறது. கொதிக்கும் நீரில் ஒரு இலவங்கப்பட்டை சேர்த்து, உங்கள் மாதவிடாய் காலத்தில் இந்த தேநீரை குடிக்கவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம்.

இஞ்சி நீர் உட்கொள்ளவும்:
தண்ணீரில் சிறிது இஞ்சி சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்த நீரைக் குடிப்பது அதிக இரத்த ஓட்டத்தைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கலவையில் நீங்கள் சர்க்கரை அல்லது தேன் சேர்க்கலாம். இதை ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கலாம்.

கொத்தமல்லி விதைகள் நன்மை பயக்கும்:
மாதவிடாய் காலங்களில் அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்கவும், மாதவிடாய வலியைத் தடுக்கவும் கொத்தமல்லி விதைகள் சிறந்த மருந்தாகும். வெதுவெதுப்பான நீரில் கொத்தமல்லி விதைகளை சேர்த்து, பிறகு குடிக்கவும்.

Views: - 386

0

0