வாயுத்தொல்லை காரணமாக ரொம்ப சங்கடமா இருக்கா… உங்களுக்கான டிப்ஸ் இதோ!!!

Author: Hemalatha Ramkumar
29 April 2023, 6:41 pm
Quick Share

வாயு தொல்லை என்பது வலி மிகுந்ததாகவும், அசோகரியத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும், அதோடு மற்றவர்களின் மத்தியில் சங்கடத்தை உண்டாக்கக்கூடிய ஒன்றாகவும் அமைகிறது. எனினும் இதிலிருந்து விடுபடுவதற்கு எளிமையான வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வாயு மற்றும் வயிற்று உப்புசத்திற்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பைத்தியம் புதினா தேநீர் ஆகும். இதில் காணப்படும் மென்தால் செரிமான குழாயில் உள்ள தசைகளை ரிலாக்ஸ் செய்து வாயுக்களை எளிதாக செல்ல அனுமதிக்கிறது. ஒரு கப் புதினா தேநீர் உணவுக்கு பிறகு ஒரு கப் புதினா தேநீர் குடிப்பது வாயுவினால் ஏற்படும் அசௌகரித்தில் இருந்து விடுபட உதவும்.

ஆப்பிள் சைடர் வினிகரில் செரிமான நன்மைகள் உள்ளன. இதில் காணப்படும் நொதிகள் உணவை உடைத்து அதிலிருந்து வெளிவரும் வாயுவை குறைக்க உதவுகிறது. உணவுக்கு முன்பு ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் கலந்த தண்ணீரை குடிப்பது வயிற்று உப்புசம் மற்றும் அசோகரித்தை போக்க உதவும்.

இஞ்சியில் இயற்கையான வீக்க எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் செரிமான குழாயில் உள்ள தசைகளை ஆற்றுவதற்கு இது உதவுகிறது. உணவோடு சேர்த்து ஒரு ஸ்பூன் இஞ்சி சாப்பிடுவது அல்லது ஒரு கப் இஞ்சி தேநீர் குடிப்பது இந்த அசௌகரியங்களில் இருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கும்.

சாமந்திப்பூ தேனீர் அமைதியான மற்றும் ஆற்றக்கூடிய விளைவுகளை அளிக்கும். இது செரிமானக் குழாயில் உள்ள தசைகளை ஆற்றுகிறது. இதன் காரணமாக வாயுக்கள் குழாய் வழியாக எளிதில் செல்கிறது. உணவுக்குப் பிறகு ஒரு கப் சாமந்திப்பூ தேநீர் குடிப்பது வாயு உருவாக்கத்தை தடுக்க உதவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 278

0

0