பொழுது சாய்ந்த பிறகு வீடு பெருக்கினா ஆரோக்கியம் கெட்டுப்போகும்னு சொல்றாங்களே… அது உண்மையா???

Author: Hemalatha Ramkumar
10 June 2023, 7:25 pm
Quick Share

பொழுது சாய்ந்த பிறகு வீடு பெருக்கவோ, துடைக்கவோ அல்லது கழுவவோ கூடாது என்று பெரியவர்கள் சொல்லி நிச்சயமாக நாம் கேட்டிருப்போம். ஆனால் எதற்காக அப்படி கூறுகிறார்கள்? இதற்கு பின்னால் உள்ள அறிவியல் பூர்வமான காரணம் என்ன? இந்த பதிவில் உங்கள் கேள்விக்கான பதில்களை தெரிந்து கொள்வோம்.

பொழுது சாய்ந்த பிறகு வீடு கூட்டுவது கெட்ட அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். இது பல நூற்றாண்டுகளாக கூறப்படும் ஒரு மூடநம்பிக்கை ஆகும். இதற்கு எந்த ஒரு அறிவியல் பூர்வமான காரணமும் கிடையாது. பொழுது சாய்ந்த பிறகு கெட்ட ஆவிகள் மற்றும் ஆன்மாக்கள் சுற்றி வரும் என்பதால், வீடு கூட்டுவதால் ஏற்படும் சத்தம் அவற்றை தொந்தரவு செய்யும் என்று சொல்லப்படுகிறது.

இன்னும் சிலர் பொழுது சாய்ந்த பிறகு வீடு கூட்டினால் ஆரோக்கியத்திற்கு தீங்கு வரும் என்று நம்புகின்றனர். சூரியன் மறைந்த பிறகு வீடு கூட்டுவது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்க செய்து, ஒரு சில நோய்களை உண்டாக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கும் எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் கிடையாது. எனினும், பொழுது சாய்ந்த பிறகு வீடு கூட்டும் பொழுது குறைவான வெளிச்சம் காரணமாக தவறுதலாக அடிபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். அதுவே போதுமான வெளிச்சத்தில் வீடு கூட்டுவதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

சூரியன் மறைந்த பிறகு வீடு கூட்டினால் கெட்ட ஆன்மாக்களுக்கு அது தொந்தரவாக இருக்கும் என்று என்ற மூடநம்பிக்கை உள்ளது. இதற்கும் எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இதுவரை இல்லை. தேவையற்ற சத்தம் பறவைகள் அல்லது பிற விலங்குகளை தொந்தரவு செய்யலாம் என்பதை தவிர ஆன்மாக்களை அது தொந்தரவு செய்யும் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Views: - 260

0

0