உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்படக் காரணம் என்ன???

Author: Hemalatha Ramkumar
30 April 2023, 5:51 pm
Quick Share

வேகமாக ஓடுவது போன்ற தீவிரமான உடற்பயிற்சி என்று வரும்போது, பயிற்சியை எப்படிச் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையுடன் மேற்கொள்வது மிகவும் அவசியம். அதை மிகைப்படுத்த வேண்டாம் என்று நிபுணர்கள் முதலில் அறிவுறுத்துகிறார்கள்.
நீங்கள் அதிகப்படியாக செய்யும் எதுவும் தீமையே செய்யும், நன்மையைத் தராது. அதிகப்படியான உடற்பயிற்சி மாரடைப்பு, திடீர் இதய செயலிழப்பு அல்லது இதயச் செயல்பாடு குறைவதற்கு வழிவகுக்கும்.
இளைஞர்களில் திடீர் இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் வேறுபடுகின்றன.

இருப்பினும், கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இளைஞர்களில், கரோனரி தமனி நோயின் முதல் அறிகுறி பெரும்பாலும் மாரடைப்பு வடிவத்தில் வருகிறது.
எந்தவொரு உடல் செயல்பாடுகளின் போதும் மாரடைப்பு பொதுவாக ஏற்கனவே இதய நோய் அல்லது மரபணு பிரச்சினை உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது.

வொர்க் அவுட் செய்யும் பொழுது, உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு ஏற்படுவதற்கான பிற அரிதான நிகழ்வுகளில் சில காரணங்களால் இதயத்தில் திடீரென இரத்த உறைவு ஏற்பட்டு, இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
இதனால் திடீர் இரத்த ஓட்ட குறைவு சேதத்தை ஏற்படுத்துகிறது.

கொழுப்பு மற்றும் இதய தசைகளுக்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளில் சேரும் பிற பொருட்கள் பிளேக்குகள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த பிளேக் சில காரணங்களால் இதயத்தின் தமனியில் வெடிக்கும் போது, அங்கு ஒரு இரத்த உறைவு உருவாகிறது. இந்த இரத்த உறைவு இரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இது மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டால், இதயத் தமனிகளில் ஏற்கனவே அவர்களுக்குத் தெரியாத அடைப்பு இருக்கலாம்.
எனவே, ஒரு நபர் தனது மருத்துவ நிலைமைகள் குறித்தும், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள் பற்றிய தகவல்களையும் அறிந்திருக்க வேண்டும். மேலும் அவற்றைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நீங்கள் அதிக தீவிர உடற்பயிற்சி செய்ய விரும்பினால், முதலில் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குறிப்பாக உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் மாரடைப்பு ஏற்பட்டாலோ, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்தாலோ தீவிர உடற்பயிற்சிக்காக சில மேம்பட்ட பரிசோதனைகளைச் செய்து கொள்வது நல்லது. அதை கட்டுப்படுத்துவது நல்லது. தேவையான மருந்துகளை கொடுக்கலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 285

0

0