ஆண்மைக் குறைபாட்டை சரி செய்வதற்கான சில டிப்ஸ்!

Author: Hemalatha Ramkumar
28 February 2023, 3:19 pm
Quick Share

ஆண்மைக் குறைபாடு என்பது ஆண்களில் காணப்படும் ஒரு மிக முக்கியமான பிரச்சனை ஆகும். ஆண்மைக் குறைபாடு காரணமாக குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படலாம். இதனை குணப்படுத்த இயலாது என்றும் சில கருத்துக்கள் உண்டு. ஆனால், இதனை கண்டிப்பாக குணப்படுத்தலாம். இதோ அதற்கான வீட்டுக் குறிப்புகள்: 

  • விந்து உற்பத்தியை அதிகரிக்க அஸ்வகந்தா பொடியை (இது நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கும்) தினமும் பாலில் தேன் அல்லது கற்கண்டு கலந்து அருந்தலாம். இவ்வாறு தினமும் குடித்தால் நாடி நரம்புகளும்  பலப்படும்.
  • வழக்கமாக செய்யும் தேங்காய் துவையல் உடன் கொஞ்சம் கசகசா சேர்த்து அரைத்து உணவுடன் சாப்பிட்டு வர தாது வலுப்பெறும்.
  • காய்ந்த அத்திப்பழத்தை தொடர்ந்து 41 நாட்கள் உண்டு வந்தால் ஆண்களின் விந்து எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
  • வில்வ பழத்தின் சதையை மட்டும் எடுத்து அதனுடன் கற்கண்டு தூள் சேர்த்து தினசரி காலையில் சாப்பிட்டால்  விந்துவை அதிகரிக்க உதவியாக இருக்கும். வில்வப் பழம் பொதுவாக நம் வீட்டின் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளிலேயே எளிதில் கிடைக்கும் ஒரு பழம் தான். அத்னை வாங்கி அதில் உள்ள ஓட்டை மட்டும் நீக்கி விட்டு பழத்தின் உள் இருக்கும் காய்ந்த சதையை வெளியே எடுத்து அதனை சூரிய ஒளியில் நன்றாக உலர வைத்து பொடியாக செய்து கொள்ளவும். காய வைத்த பழத்துடன் நீங்கள் கற்கண்டு தூளை மட்டும் சேர்த்து ஒரு கண்ணாடி பாட்டிலில் காற்று புகாதவாறு பத்திரபடுத்தி கொள்ளவும். இதனை தினமும் சபைட்டு வந்தாலே போதும்.
  • 100 கிராம் அளவில் நீர்முள்ளி விதைகளை ஏதேனும் நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கி அதனை சுத்தம் செய்து ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் உங்கள் தினசரி உணவிற்கு பின்னர் உண்டு வந்தால் இரத்தம் பெருகி விந்து இறுகிப் போய் வெண்ணெய் போல ஆகிவிடும். இதனை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தால் சவ்வு போல் ஆகிவிடும். அதனால் வெறுமனே கைகளில் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
  • நிலப்பனைக் கிழங்கை நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி அதனை பொடித்து வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்து பாலில் சேர்த்து சர்க்கரையைப் போட்டு பருகலாம்.
Views: - 480

0

0