உலக இரத்த தான தினம் 2023: இரத்த தானம் செய்த பிறகு என்னென்ன செய்யலாம்… என்னென்ன செய்யக்கூடாது!!!

Author: Hemalatha Ramkumar
14 June 2023, 10:22 am
Quick Share

ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 14 உலக இரத்த தானம் செய்பவர்கள் தினமாக (WBDD) அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம், இன்டர்நேஷனல் ரெட் கிராஸ் ஃபெடரேஷன் மற்றும் ரெட் கிரெசன்ட் சொசைட்டியின் கூட்டு முயற்சியால், இந்த தினம் முதன்முதலில் 2004 இல் அனுசரிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டிற்கான உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தின் கருப்பொருள் “இரத்தத்தைக் கொடுங்கள், பிளாஸ்மாவைக் கொடுங்கள், உயிரை பகிர்ந்து கொள்ளுங்கள், அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்.” இது வாழ்நாள் முழுவதும் இரத்தமாற்றம் தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் இரத்தம் அல்லது பிளாஸ்மா தானம் செய்வதன் மூலம் ஒவ்வொரு நபரும் ஆற்றக்கூடிய மதிப்புமிக்க பங்கை எடுத்துக்காட்டுகிறது.

இரத்த தானம் செய்த பிறகு என்னென்ன செயல்பாடுகளைச் செய்யலாம்?
இரத்த தானம் செய்த பிறகு, உங்களை கவனித்துக்கொள்வது மற்றும் உங்கள் உடலை ரெக்கவர் ஆக அனுமதிப்பது முக்கியம். இரத்த தானம் செய்வதால் இரும்பு மற்றும் பிற முக்கிய தாதுக்கள் இழப்பு ஏற்படுகிறது. எனவே இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலமும், ஏராளமான திரவங்களை குடிப்பதன் மூலமும் இவற்றை நிரப்புவது முக்கியம். கூடுதலாக, உடலை மீட்டெடுக்க நிறைய ஓய்வு பெறுவது முக்கியம்.

இருப்பினும், நீங்கள் முற்றிலும் எந்த ஒரு வேலையையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. எடுத்துக்காட்டாக, நடைபயிற்சி போன்ற இலகுவான உடல் செயல்பாடுகளை செய்யலாம். இரத்த தானத்திற்குப் பிறகு நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள்:-

இரத்த தானம் செய்த பிறகு உங்கள் உடலுக்கு ஓய்வு அவசியம். தானம் செய்த பிறகு குறைந்தபட்சம் 24 மணிநேரத்திற்கு நீங்கள் கடினமான செயல்களையோ அல்லது அதிக எடை தூக்குவதையோ தவிர்க்க வேண்டும்.

நீங்கள் ஒரு விறுவிறுப்பான நடைப்பயணத்தை மேற்கொள்ளலாம். நடைபயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் மீட்பு செயல்முறைக்கு உதவுகிறது. உங்கள் உடலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாத சில லேசான பயிற்சிகளை செய்யலாம்.

இரத்த தானம் செய்த பிறகு நீரேற்றமாக இருப்பது முக்கியம். திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை நிரப்ப நிறைய தண்ணீர், பழச்சாறுகள் குடிக்கவும்.

இரத்த தானம் செய்த பிறகு, உங்கள் உடலை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் நிரப்ப ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது முக்கியம்.

இரத்த தானம் செய்வது உங்களை சோர்வாக மாற்றும், எனவே நன்றாக தூங்குவது உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் அல்லது வலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 428

0

0