மன அழுத்தத்தை போக்கும் உங்களின் சில ஃபேவரெட் உணவுகள்!!!

Author: Hemalatha Ramkumar
13 June 2023, 6:21 pm
Quick Share

நம் அன்றாட வாழ்வில் மன அழுத்தம் ஒரு இன்றியமையாத பகுதியாகவே மாறிவிட்டது. இதனை முழுவதுமாக தவிர்க்க முடியாது என்றாலும், அதனை கட்டுப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் நம்மால் ஆன ஒரு சில முயற்சிகளை நாம் நிச்சயமாக எடுக்கலாம். அந்த வகையில் ஒரு சில உணவுகளை சாப்பிடுவது நம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் ஆகவே அடுத்த முறை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் பொழுது இந்த உணவுகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள்

இந்த லிஸ்டில் முதலாவது இடத்தை பிடிப்பது டார்க் சாக்லேட். டார்க் சாக்லேட்டில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்டுகள் மன அழுத்த ஹார்மோன்களை குறைக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல் இது என்டார்பின்கள் என்ற ஹார்மோனை அதிகரிப்பதன் மூலமாக நம் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. ஆகவே மன அழுத்தமாக இருக்கும் பொழுது ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடுவது உங்கள் மனதை அமைதிப்படுத்தி, சாந்தமாக்க உதவும்.

இரண்டாவதாக ப்ளூ பெர்ரிகள். ப்ளூ பெர்ரிகளில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் வைட்டமின் சி காணப்படுகிறது. இவை மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. மன அழுத்தமாக இருக்கும் பொழுது ஐந்து முதல் ஆறு ப்ளூபெர்ரி சாப்பிடுவது உங்களை ரிலாக்ஸாக உணர வைக்கும்.

அவகாடோ என்று சொல்லப்படும் சூப்பர் ஃபுட்டில் ஆரோக்கியமான கொழுப்பு சத்து, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் காணப்படுகிறது. இது ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்த ஹார்மோன்களை குறைக்கிறது. ஒரு எலக்ட்ரோலைட் ஆக செயல்படும் பொட்டாசியம் ஹைப்பர் டென்ஷனை குறைத்து, மனதை அமைதிப்படுத்துகிறது அவகாடோ டோஸ்ட் அல்லது சாலட் போன்றவற்றை நீங்கள் முயற்சி செய்யலாம்.

பாதாம் பருப்பில் கொழுப்பு சத்து, நார்ச்சத்து மற்றும் புரோட்டின் நிறைந்துள்ளது. மேலும் பாதாம் பருப்பில் காணப்படும் மெக்னீசியம் நமது தசைகளை ரிலாக்ஸ் ஆக வைத்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சோகமாக இருக்கும் பொழுது ஒரு கைநிறைய பாதாம் பருப்பை எடுத்து சாப்பிட்டு பாருங்கள். நிச்சயமாக நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

சோகமாக இருக்கும் பொழுது வஞ்சிர மீன் சாப்பிட்டால் சரியாகும் என்று சொன்னால் யார் தான் சாப்பிட மாட்டார்கள். வஞ்சரம் மீனில் காணப்படும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்கள் தேவையற்ற வீக்கத்தை குறைத்து, மன அழுத்த ஹார்மோன்களை குறைக்கிறது. ஆகவே அடுத்த முறை மன அழுத்தம் வரும் பொழுது நிச்சயமாக வஞ்சரம் மீனை முயற்சி செய்து பாருங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 276

0

0