ஊளை சதையை மல மலவென குறைக்க காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய பழம்!!!

Author: Hemalatha Ramkumar
12 June 2023, 7:01 pm
Quick Share

நம்மில் பெரும்பாலானோர் ஒரு நாளைக்கு மூன்று வேலை உணவு சாப்பிடுவது வழக்கம். அந்த மூன்று வேலை உணவுகளில் காலை உணவு முக்கியமானதாக கருதப்படுகிறது. காலையில் நாம் சாப்பிடும் எந்த ஒரு உணவும் நேரடியாக நமது உடலில் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே நமது நாளை ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுடன் துவங்குவது மிகவும் அவசியம். இது நம் ஆரோக்கியத்தை பாதுகாத்து நம்மை நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க உதவும்.

பொதுவாக பழங்கள் மற்றும் காய்கறிகள் நமது நாளை தொடங்குவதற்கு சிறந்த உணவுகளாக கருதப்படுகின்றன. எல்லா வகையான பழங்களும் காய்கறிகளும் நமக்கு ஆரோக்கியத்தை அள்ளி அள்ளி தருகிறது. அதில் பப்பாளி பழமும் ஒன்று. மிகவும் சுவையான மற்றும் சத்து மிகுந்த பப்பாளி பழத்துடன் நமது நாளை தொடங்குவதால் கிடைக்கும் பல நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க பப்பாளி சிறந்த பழம். பப்பாளியில் குறைந்த கலோரிகளும், அதிக நார்ச்சத்தும் இருப்பதால் எடை இழக்க இது ஒரு சூப்பர்ஃபுட்டாக கருதப்படுகிறது. பப்பாளி சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் நமக்கு வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது. இதனால் பசி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. ஆகவே நீங்கள் எடை இழக்க முயற்சி செய்து வருகிறீர்கள் என்றால் உங்கள் உணவில் நிச்சயமாக பப்பாளி பழத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை ஏற்படுமாயின் உங்கள் காலை உணவில் நன்கு பழுத்த பப்பாளி பழத்தை சேர்ப்பது பலன் தரும். வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிடுவது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.
பப்பாளி பழத்தில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஏராளமான நார்ச்சத்து இருப்பதால் இது செரிமானத்தை எளிதாக்குகிறது.

நமது உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பது நமது இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். பப்பாளியில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை திறம்பட குறைக்கிறது. மேலும் பப்பாளியில் பொட்டாசியம் காணப்படுவதால் இது உயர் ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. இதனால் இதயத்தின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது.

பப்பாளியில் ஏராளமான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்து காணப்படுகிறது. இது நமது நோய்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பப்பாளி பழத்தை காலையில் சாப்பிட்டு வர பலவிதமான நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். மேலும் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடல் சுத்தமாகிறது.

பப்பாளி நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் சரும ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை தருகிறது. பப்பாளியில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் நம் உடலுக்கு மிகவும் தேவையான ஆக்சிஜனேற்றங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது. சருமத்தை ஃப்ரீ ரேடிக்குள் சேதத்தில் இருந்து பாதுகாத்து சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 393

0

0