இடியுடன் பெய்த கனமழை… கருகிய தென்னை மரம் : மளமளவென தீ பிடித்ததால் தலைதெறிக்க ஓட்டம் பிடித்த மக்கள்…!!

Author: Udayachandran RadhaKrishnan
3 May 2022, 8:00 pm
Thunder on Tree -Updatenews360
Quick Share

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கங்காதர நல்லூரில் தென்னை மரத்தின் மீது இடி விழுந்து அந்த தென்னை மரம் எரிந்து கருகியது.

இன்று மாலை கங்காதர நல்லூரில் இடி மின்னலுடன் கோடை மழை பெய்தது. அப்போது கங்காதர நல்லூர் கிராம செயலகம் அருகே உள்ள தென்னை மரம் ஒன்றின் மீது பயங்கர சத்தத்துடன் இடி விழுந்து அந்த தென்னை மரம் எரிய துவங்கியது.

இதனை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தென்னை மரத்தில் எரிந்து கொண்டிருந்த தீ மீது தண்ணீரை பீச்சி அடித்து அதனை கட்டுப்படுத்தி அணைத்தனர்.இடி மின்னல் காரணமாக கங்காதர நல்லூர் பகுதியில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

Views: - 712

0

0