முருங்கைக்காய், முள்ளங்கி சாம்பார் எல்லாம் சாப்பிட்டு போர் அடிச்சி போச்சா? இந்த ஆவாரம் பூ சாம்பார் ட்ரை பண்ணுங்க!!!

Author: Hemalatha Ramkumar
25 February 2023, 9:11 am
Quick Share

பொதுவாக நாம் முருங்கைக்காய், கத்திரிக்காய் அல்லது முள்ளங்கி சாம்பார் தான் அடிக்கடி வைப்போம். ஆனால், ஆவாரம் பூ கொண்டு எளிதில் சாம்பார் வைத்து விடலாம். இது சுவையானதாக மட்டும் இல்லாமல் சத்தானதாகவும் இருக்கும். வாருங்கள், எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

ஆவாரம் பூ – 1 கப்

துவரம் பருப்பு – 1/4 கப்

வெங்காயம் – 1 பெரியது

தக்காளி – 2

சாம்பார் பொடி – தேவையான அளவு

சீரகம் – 1 டீஸ்பூன்

கடுகு – தாளிக்க 

உளுத்தம் பருப்பு – தாளிக்க

கருவேப்பிலை – 1 இணுக்கு

மஞ்சள் – 1/4 தேக்கரண்டி

எண்ணெய் – 2 ஸ்பூன்

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை: 

  • முதலில் ஆவாரம் பூக்களை எடுத்து, அவற்றின் காம்புகளை நீக்கி, தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுத்து குக்கரில் துவரம் பருப்பு, சீரகம், நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து 200 மில்லி தண்ணீர் ஊற்றவும். 4 விசில் வந்த உடன் இறக்கி வைக்கவும்.
  • விசில் அடங்கியதும் குக்கரை திறந்து அதில் சாம்பார் பொடி சேர்த்து கலக்கி விடவும். 
  • பின்னர் ஒரு கடாயில் எண்ணையை ஊற்றி காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காய தூள், கருவேப்பிலை போன்றவற்றைப் போட்டு தாளிக்க வேண்டும்.
  • அதில் நீட்டாக நறுக்கி வாய்த்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.
  • பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • நன்றாக வதங்கிய உடன் இதனை குக்கரில் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். 
  • மிளகாய் தூள் வாசனை போனவுடன் சுத்தம் செய்த ஆவாரம் பூவை அதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு சுமார் 5 நிமிடத்திற்கு கொதிக்க விட வேண்டும்.
  • அடுப்பை ஆஃப் செய்து விட்டு கொத்தமல்லி இலைகளை சிறியதாக நறுக்கி சாம்பாரில் சேர்த்து இறக்கி விடவும். 

அவ்வளவு தான் சுவையான சத்தான சாம்பார் தாயர். இதனுடன் உருளைக் கிழங்கு வறுவல் செய்து சாப்பிடுங்கள். அட்டகாசமாக இருக்கும்!

குறிப்பு: இதில் ஆவாரம் பூ சேர்த்து நன்றாக கொதி வந்த உடன், நீங்கள் 2 ஸ்பூன் தேங்காய் மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகம் ஆகிய இரண்டையும் அரைத்து அதில் சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொத்திக்கவிடலாம். தேங்காய் வேண்டாம் என்று நினைப்பவர்கள் இதனை தவிர்த்து விடலாம்.

Views: - 385

0

0