மனைவிக்கு கொரோனா என கூறி குழந்தைகளுடன் கணவன் எஸ்கேப் : பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் சடலம்.. சட்டவிரோத லாட்டரியால் வந்த வினை..!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2022, 9:21 pm
Wife Murder - Updatenews360
Quick Share

திருச்சி : லால்குடி அருகே மனைவியை கொலை செய்து விட்டு, வீட்டின் உள்ளே பிளாஸ்டிக் பையினால் சடலத்தை சுற்றி வைத்து வீட்டை பூட்டி விட்டு, தனது தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள சாய்நகர் மீனாட்சி நகரில் உள்ள ஏஜேபி அப்துல்கலாம் தெருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் வாடகைக்கு குடியேறியவர் நரசிம்மராஜ் (வயது 37). இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 26).

இவர்களுக்கு 10 மற்றும் 9 ஆகிய வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நரசிம்மராஜ் பூர்வீகம் ஆந்திர மாநிலம் . கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருச்சி சமயபுரம் பகுதியில் குடியேறிய நரசிம்மராஜ் திருச்சி திருவாணைக்காவல் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவரின் மகள் ரஞ்சனியை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.

நரசிம்மராஜ் சமயபுரம் பகுதியில் விற்பனை செய்யும் தடைசெய்யப்பட்ட லாட்டரிகளுக்கு ஏஜென்டாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சமயபுரம் சக்திநகரில் புதிதாக வீடு கட்டிய அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் அந்த வீட்டினை ரூ. 28 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.

இந்த வீட்டினை விற்பனைசெய்த பிறகு தான் தாளக்குடி ஊராட்சியில் உள்ள சாய் நகரில் நரசிம்மராஜ் அவரது தாய், மற்றும் நரசிம்மராஜ் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என 5 பேரும் வாடகைக்கு குடியிருந்துள்ளனர்.

ரூ. 28 லட்சத்தினை நரசிம்மராஜ் அவரது தடைசெய்யப்பட்ட லாட்டரியில் முதலீடு செய்ய முயன்றுள்ளார். இதற்கு அவரது மனைவி ரஞ்சனி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்து சண்டை நடந்துள்ளது. இது தொடர்பாக ரஞ்சனி பெற்றோர் இருவரையும் சமாதனப்படுத்தி தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். வீட்டு மனைகளை வாங்கி முதலீடு செய்ய இருவரையும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை அடித்து கத்தியால் குத்தி கொலை செய்து உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி மறைத்து வைத்துள்ளார்

அதிகாலை தனது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளிடம் மனைவி ரஞ்சனி க்கு கொரேனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளேன். நீங்கள் அனைவரும் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு செல்லலாம் எனக் கூறி, நரசிம்மராஜ் தாய், மற்றும் இரண்டு குழந்தைகள் என மூவரும் கடந்த திங்கள் கிழமை வீட்டினை பூட்டி விட்டு ஆந்திரா சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மகள் ரஞ்சனியிடம் பேச அவரது பெற்றோர் ரஞ்சனிக்கும், அவரது மருமகன் நரசிம்மராஜ் ஆகியோருக்கு போன் செய்தால் போன் சுவிட் ஆப் என உள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் தாளக்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு பூட்டிய நிலையில் உள்ளது.

சந்தேகமடைந்த ரஞ்சனி பெற்றோர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகபட்டினம் பகுதியில் உள்ள நரசிம்மராவ் தங்கைக்கு போன் செய்து கேட்ட போது குழந்தைகள் இரண்டும் இங்கு தான் உள்ளதாகவும், தனது அண்ணன் நரசிம்மராஜ், தனது தாய் ஆகிய இருவரும் கொரோனா பரிசோதனை எடுக்க செல்வதாக கூறி விட்டு சென்ற இருவரும் இது வரை வீடு திரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.

உடனை தாளக்குடியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்துப் பார்த்த போது, வீட்டின் வாஷின் மெசின் சந்து பகுதியில் பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றியநிலையில் இருந்த சடலத்தை பிரித்து பார்த்த போது ரஞ்சனி அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து சமயபுரம் கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீரங்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தலைமறைவாக உள்ள நரசிம்மராஜை பிடிக்க தனிப்படை போலீஸôர் ஆந்திரமாநிலம் விரைந்து சென்றது.

Views: - 610

0

0