திமுகவுக்கு ஓட்டு போட்டால் கருணாநிதி பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே பலனடைவார்கள் : பிரதமர் மோடி அட்டாக்!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2023, 7:53 pm
PM Modi - Updatenews360
Quick Share

திமுகவுக்கு ஓட்டு போட்டால் கருணாநிதி பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே பலனடைவார்கள் : பிரதமர் மோடி அட்டாக்!

மத்திய பிரதேசம் சென்ற பிரதமர் மோடி 5 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார். பிறகு, பா.ஜ.,வின் பூத் கமிட்டியினருடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக மோடி பேசினார்.

அப்போது மோடி பேசியதாவது, இன்று இரண்டு வந்தே பாரத் ரயில்களை பெற்ற ம.பி., மாநிலத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். போபால் முதல் ஜபல்பூர் வரையிலான பயண நேரம் இனி குறையும்.வந்தே பாரத் ரயில் மூலம் மாநிலத்தில் ரயில் போக்குவரத்து மேம்படும்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து தப்ப எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர். ஊழல் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் பாதுகாக்க நினைக்கின்றனர். ஆனால், உறுதியாக ஊழல்வாதிகள் தண்டனை பெறுவார்கள். தி.மு.க.,வுக்கு ஓட்டளித்தால், கருணாநிதியின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே பலனடைவார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப்போட்டால், சோனியா குடும்பம் மட்டுமே பலனடையும். எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டிற்கு உகந்தது அல்ல… நாட்டு நலனுக்காகவும், சந்ததிகள் முன்னேற்றத்திற்கும் மக்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டுப்போட வேண்டும் என பேசினார்.

Views: - 238

0

0