தாலி கட்டிய கையோடு வெளிநாடு புறப்பட்ட கணவன்.. தனிமையில் இருந்த இளம்பெண் : நள்ளிரவில் கூடிய ஊர்மக்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2023, 2:32 pm
Illegal Love -Updatenews360
Quick Share

தாலி கட்டிய கையோடு வெளிநாடு புறப்பட்ட கணவன்.. தனிமையில் இருந்த இளம்பெண் : நள்ளிரவில் கூடிய ஊர்மக்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

ஜார்க்கண்ட் மாநிலம் கிரித் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்த இளம்பெண். இவரது கணவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.. சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த ஒருசில நாட்களிலேயே, கணவன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். அதனால், கான்புராவில் உள்ள கிராமத்திற்கு அவரது மனைவி சென்றுள்ளார்.

இந்த நிலையில் இவருக்கும், குத்ரியாபாத்தை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக உருவெடுத்தது. 2 பேருமே அடிக்கடி ரகசியமாக சந்தித்து உறவு கொண்டு வந்தனர்.

இப்படித்தான் சம்பவத்தன்று அந்த இளைஞர், தன்னுடைய கள்ளக்காதலியை சந்திக்க போயுள்ளார். அதுவும் நள்ளிரவில் அந்த பெண்ணின் வீட்டுக்கு போயிருக்கிறார்.

இதை அக்கம்பக்கத்தினர் பார்த்துவிட, உடனே மொத்த கிராமத்துக்கும் விஷயம் பரவிவிட்டது. அதனால், எல்லாரும் ஒன்றுதிரண்டு, அந்த பெண்ணின் வீட்டின் கதவை தட்டினார்கள். உள்ளே இருந்த கள்ளக்காதல் ஜோடி, ஊர்மக்களிடம் வசமாக சிக்கவிட்டது.

இதனால், பெண்ணின் குடும்பத்தினரும், கிராம மக்களும் கடும் ஆத்திரம் அடைந்தனர். அந்த இளைஞரை ஊருக்கு நடுவில் இருந்த மரத்தில், கயிற்றால் கட்டி வைத்து, அடித்து உதைத்தனர்..

இதில் அந்த இளைஞருக்கு மண்டை உடைந்து, உடம்பெல்லாம் ரத்தம் கொட்டியிருக்கிறது.. ஆனால் கடைசிவரை ஊர்க்காரர்கள் போலீசுக்கு போகவில்லை.

இந்த தகவல் கிடைத்ததையடுத்து, போலீஸாரே விரைந்து அந்த கிராமத்துக்கு சென்று இளைஞரை மீட்டிருக்கிறார்கள். அந்த பெண்ணையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

ஆனால், இதுவரை எழுத்துப்பூர்வமாக யாரும் புகார் அளிக்கவில்லை. இதனிடையே, மறுபடியும் ஊர்பஞ்சாயத்து கூடியது. கையும் களவுமாக இந்த ஜோடி சிக்கிவிட்டதால், இவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்துவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு சம்மதிக்கவில்லை. அதே போல இளைஞரின் குடும்பத்தினரும் மறுத்துவிட்டனர். 2 தரப்பிலுமே மறுப்பு தெரிவித்துவிட்டதால், இது சம்பந்தமாக என்ன செய்வதென்றே தெரியாமல் பஞ்சாயத்தினர் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இதற்கிடையில் வெளிநாட்டிலுள்ள கணவனுக்கும் விஷயம் சொல்லி உள்ளார்கள். அடுத்து என்ன நடக்க போகிறதென்று, இனிமேல்தான் தெரியவரும்.

Views: - 343

0

1