சிறையில் உள்ள மகளை பார்க்க வந்த தாய்க்கு சிறை : ஆசை ஆசையாக மகளுக்கு வாங்கி வந்த GIFT… சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2022, 3:26 pm
Mother Supply Cannabis to Daugh - Updatenews360
Quick Share

மதுரை மத்திய சிறையில் உள்ள மகளுக்கு கஞ்சா பொட்டலங்களை கொடுக்க முயற்சித்த தாயை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மத்திய சிறையில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட தண்டனை பெற்ற கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இதில் பெண் கைதிகள் தனிசிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சிறைவாசியை பார்வையாளர் நேர்காணல் செய்ய சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து ஏனைய நாட்களில் காலை முதல் மதியம் வரை நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர்.

இந்தநிலையில் பெண்கள் தனிச்சிறையில் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 8 ஆம் தேதி முதல் மத்திய சிறையில் விசாரணை சிறைவாசியாக இருந்து வரும், திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்த சுசீலாமேரி என்ற பெண் கைதியை சிறையில் வந்து நேர்காணல் மனு வழங்கி சந்திப்பதற்காக மத்திய சிறைக்கு சுசீலாமேரியின் தாயாரான பாத்திமாமேரி வந்தார்.

அப்போது சிறையின் பிரதான வாயிலில் சிறைக்காவலர்கள் சோதனை மேற்கொண்டபோது,
அவரது மேலாடையில் மறைத்து வைத்திருந்த சுமார் 120 கிராம் எடைமதிப்புள்ள 17 பொட்டலங்கள் இருந்ததை கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து மேலாடையில் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டு சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருளை கொண்டுவந்தாக பாத்திமாமேரி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கரிமேடு காவல் நிலையத்தில் சிறைத்துறையினர் ஒப்படைத்தனர்.

Views: - 524

0

0