மசாஜ் சென்டரில் புகுந்து பெண்களிடம் கத்தியை காட்டி நகை கொள்ளை : பிரபல ரவுடி அட்டகாசம்… பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2022, 9:14 pm
Massage Center Threaten - Updatenews360
Quick Share

புதுச்சேரி : மசாஜ் செண்டரில் கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் தொடார்புடைய 4 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி சத்யா உள்ளிட்ட 3 பேரை போலீசார் சிசிடிவி காட்சியை வெளியிட்டு தேடி வருகின்றனர்.

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள சங்கரதாஸ் வீதயில் மசாஜ் செண்டர் இயங்கி வந்தது இதனிடையே கடந்த 6 ஆம் தேதியன்று மர்ம கும்பல் ஒன்று மசாஜ் செண்டரினுள் புகுந்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்த பெண்ணின் கழுத்தி அணிந்து இருந்த ரூ.81 ஆயிரம் மதிபுள்ள அரை சவரன் தங்க நகையை பறித்து சென்றனர்.

இது குறித்து மசாஜ் செண்டரின் உரிமையாளர் விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பெரியகடை போலீசார் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பல்வேறு குற்ற சம்பவங்கள் மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய ரெயின்போ நகரை சார்ந்த பிரபல ரவுடி சத்தியா தலைமையிலான 7 பேர் கொண்ட கும்பல் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் அந்த கும்பலை தேடி வந்த நிலையில் முதல் கட்டமாக 4 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர் மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சத்தியா உள்ளிட்ட 3 பேரை சிசிடிவி காட்சியை வெளியிட்ட போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மது அருந்த பணம் இல்லாத காரணத்தால் கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்து சென்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Views: - 1018

1

0