மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அமைச்சர் பலி : மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் மா.சு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2023, 4:29 pm
Minister Dead - Updatenews360
Quick Share

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அமைச்சர் பலி : மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் மா.சு!!

ஜார்க்கண்ட் மாநில கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை அமைந்தகரையில் தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நேரில் வந்து நலம் விசாரித்து சென்றார்.

இந்நிலையில், ஜகர்நாத் மஹ்தோவுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் டுவிட்டர் பக்கதத்தில் நம்ம புலி ஜாகர்நாத் இனி இல்லை என்று கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Views: - 289

0

0