தமிழில் பேசாதீங்க, கமலை தடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் வீடியோ.!

Author: Rajesh
30 May 2022, 6:20 pm
Quick Share

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வரும் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் என பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான ப்ரமோஷன்களில் உலகநாயகன் கமல்ஹாசன் மிக தீவிரமாக சூறாவளியாய் சுற்றி ப்ரோமோஷன் செய்து வருகிறார். இந்த டெல்லி, மும்பை, கேரளா, மலேசியா என பறந்து வருகிறார்.

இதில் பிக் பாஸ் மலையாளம் நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் விக்ரம் பட ப்ரோமோஷனுக்காக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் கலந்துகொண்ட கமல், தமிழில் பேசி கலந்துரையாட தொடங்கிவிட்டார். உடனே குறுக்கிட்ட மோகன்லால், சார் இது மலையாளம் சேனல் கொஞ்சம் மலையாளத்தில் பேசுங்கள் என கூறவே, உடனே சுதாரித்து, மலையாளத்தில் சரளமாக பேச தொடங்கினர் கமல்.

இது உண்மையில், எதேச்சையாக நடந்ததா அல்லது இதுவும் ஒரு கவனிக்க வைக்க ஓர் விளம்பரமா என தெரியவில்லை. ஆனால், ஒரே மேடையில் இரு ஜாம்பவான்கள் இருந்தது ரசிகர்களுக்கு சந்தோசத்தை கொடுத்தது.

Views: - 689

3

0