செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பள்ளி மாணவி தொடர்ந்து பலாத்காரம்.. தமிழ் ஆசிரியரை நையப்புடைத்த உறவினர்கள்..!!

Author: Babu Lakshmanan
2 July 2022, 9:36 am
Quick Share

கரூர் அருகே தனியார் பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியருக்கு மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 250 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பின் தமிழ் ஆசிரியராக உள்ள நிலஒளி (வயது 40), அந்த பள்ளியில் படிக்கும் மலைப்பட்டி பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி கடந்த இரண்டு மாதமாக மொபைலில் ஆபாசமாக வீடியோ எடுத்தும், நேரடியாக வீடியோ பதிவு செய்தும் அந்த மாணவியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

நீண்ட நாட்களாகவே இந்த விஷயத்தினை அந்த மாணவி வெளியே சொல்ல பயந்து வந்த நிலையில், மாணவியின் பெற்றோருக்கு தற்போது தெரிய வந்தது. இதையடுத்து, பள்ளி ஆசிரியரின் பாலியல் தொந்தரவு குறித்து மாணவியின் போனை ஆராய்ந்து பார்த்ததில், ஆசிரியர் பாலியல் தொல்லை தொடர்ந்து கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

இதனால், ஆவேசமடைந்த பள்ளி மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அந்த பள்ளிக்கு சென்று, தமிழ் வாத்தியாருக்கு தக்க பாடம் புகட்டினர். பின்னர், பள்ளியின் முன்பு உள்ள சேங்கல் டூ பஞ்சப்பட்டி சாலையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் ஸ்டாலினின் வருகைக்காக கரூர் மாவட்ட போலீஸார் மட்டுமில்லாது சுமார் 5 க்கும் மேற்பட்ட மாவட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் பள்ளி ஆசிரியர் நிலஒளி என்பவரை இலாலாபேட்டை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

Views: - 563

0

0