ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள்!!!

Author: Hemalatha Ramkumar
12 June 2022, 6:15 pm
Quick Share

பொதுவாக எண்ணெயில் பொரித்து எடுத்த உணவுகளை அனைவரும் விரும்புவர். ஆனால் சுவையான மற்றும் மிருதுவான வறுத்த பொருட்களை வறுத்தெடுப்பதில் ஒரு பெரிய தீமை என்னவென்றால், அது சமையல் எண்ணெயை வீணடிக்க வழிவகுக்கும். எனவே, மீந்த அந்த எண்ணெயை சமையலுக்கு மீண்டும் பயன்படுத்த ஆசைப்படுகிறோம். ஆனால், மீண்டும் மீண்டும் எண்ணெயைப் பயன்படுத்தும்போது என்ன நடக்கும், அது நம் உடலுக்கு என்ன செய்கிறது என்பதை நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா?

ஆய்வுகளின்படி, சமையல் எண்ணெயை மீண்டும் சூடாக்குவது நச்சுப் பொருட்களை வெளியிடுவதற்கு வழிவகுக்கிறது. மேலும் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை அதிகரித்து வீக்கம் மற்றும் பல்வேறு நாட்பட்ட நோய்களை உண்டாக்குகிறது. எண்ணெயை மீண்டும் சூடாக்குவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் எண்ணெயை மீண்டும் பயன்படுத்த வேண்டியிருந்தால், டிரான்ஸ்-ஃபேட் உருவாவதைத் தவிர்க்க அதிகபட்சம் மூன்று முறை அதனை பயன்படுத்தலாம்.
எண்ணெயை மீண்டும் சூடாக்குவது மற்றும் மீண்டும் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

எத்தனை முறை ஒருவர் அதை பாதுகாப்பாக மீண்டும் பயன்படுத்தலாம் என்பது, அதில் என்ன வகையான உணவு வறுக்கப்படுகிறது, அது எந்த வகையான எண்ணெய், எந்த வெப்பநிலையில் சூடுபடுத்தப்பட்டது, எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பொறுத்தது.

அத்தகைய எண்ணெயில் சமைத்த உணவை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள்:
*இது நச்சுப் பொருட்களை வெளியிடுகிறது *துர்நாற்றத்தை அளிக்கிறது
*இது உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. இதனால் இதய நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
*இது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்.

எண்ணெயை மீண்டும் சூடாக்குவது எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை இப்போது நாம் அறிந்தோம். ஆரோக்கியமாகவும் நோயற்றதாகவும் இருக்க, பொரிக்க, சமைத்தல் போன்றவற்றுக்குத் தேவையான எண்ணெயின் அளவை சரியாக மதிப்பீடு செய்வது நல்லது.

Views: - 892

0

0