விஜய் நடிக்க போவது இயக்குநர் லோகேஷின் கனவு திரைப்படமா.? செம குஷியில் ரசிகர்கள்..!

Author: Rajesh
12 June 2022, 3:30 pm
Quick Share

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் தற்போது தமிழ் சினிமாவின் Talk of the town-ஆக இருந்து வருகிறார். எங்கு சென்றாலும் விக்ரம் திரைப்படத்தை பற்றியோ அல்லது இயக்குநர் லோகேஷ் குறித்த பதிவுகள் பற்றியோ தான் பார்க்க முடிகிறது. அப்படியான உச்சத்தை தொட்டு இருக்கிறார், லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான நான்கு திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றியை அடைந்துள்ளது.

கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படமும் Industry Hit என பேசப்படும் அளவிற்கு வசூலை குவித்து வருகிறது. மேலும் தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதிதான Cinematic Universe-யை அறிமுக படுத்தியிருக்கிறார் லோகேஷ்.

இதனிடையே லோகேஷ் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் தனது படம் குறித்த சிறிய அப்டெட்டை கொடுத்துள்ளார். அதன்படி லோகேஷ் கைதி திரைப்படத்தின் போது, ஒரு கேங்ஸ்டர் கதையை உருவாகி வருவதாகவும் அது தான் தனது கனவு திரைப்படம் என்றும் பேசியிருந்தார்.

மேலும் அவர் இப்போது பேசிய பேட்டியில் அந்த கனவு திரைப்படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அந்த கேங்ஸ்டர் கதை தான் அடுத்த திரைப்படம் என பேசியுள்ளார். லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க போகும் படத்தில் விஜய் நடிக்கிறார் என்ற தகவலும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

Views: - 596

0

0